1715
1715 (MDCCXV) ஒரு செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]க்சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1715 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1715 MDCCXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1746 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2468 |
அர்மீனிய நாட்காட்டி | 1164 ԹՎ ՌՃԿԴ |
சீன நாட்காட்டி | 4411-4412 |
எபிரேய நாட்காட்டி | 5474-5475 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1770-1771 1637-1638 4816-4817 |
இரானிய நாட்காட்டி | 1093-1094 |
இசுலாமிய நாட்காட்டி | 1126 – 1128 |
சப்பானிய நாட்காட்டி | Shōtoku 5 (正徳5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1965 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4048 |
நிகழ்வுகள்
தொகு- மே 3 - முழுமையான சூரிய கிரகணம் தெற்கு இங்கிலாந்து, சுவீடன், பின்லாந்து ஆகிய இடங்களில் அவதானிக்கப்பட்டது.
- சூலை 15 - விவிலியத்தின் தொடக்க நூல் தமிழில் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டது.
- சூலை 24 - பெறுமதியான பொருட்கள் அடங்கிய 10 எசுப்பானியக் கப்பல்கள் கியூபாவின் அவானாவில் இருந்து எசுப்பானியாவிற்குப் புறப்பட்டன. எழு நாட்களின் பின்னர் இவற்றில் ஒன்பது கப்பல்கள் புளோரிடா கரைக்கப்பால் முழ்கின.
- செப்டம்பர் 1 - 72 ஆண்டு கால ஆட்சியின் பின்னர் பிரான்சின் பதினான்காம் லூயி காலமானார்.
- டிசம்பர் 24 - சுவீடியப் படைகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.
- யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மதகுருக்கள் திருமுழுக்கு சடங்குகள் செய்வதும், ரோமன் கத்தோலிக்கர்கள் பொது இடங்களில் கூடுவதும் டச்சு அரசால் தடை செய்யப்பட்டது.[1]
பிறப்புகள்
தொகு- இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய், பெல்ஜியம் பிளெமியர் (இ. 1777)
- பூலித்தேவன், சிப்பாய்க்கலகத்தின் முன்னோடி (இ. 1767)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ பக். 6, Martin, J.H., Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923