வே. குமாரசுவாமி

வேலுப்பிள்ளை குமாரசுவாமி (Velupillai Kumaraswamy, 31 சூலை 1919 - 10 மார்ச் 1978) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[2]

வி. குமாரசுவாமி
V. Kumaraswamy

நா.உ.
சாவகச்சேரி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1956
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் வ. ந. நவரத்தினம்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 31, 1919(1919-07-31)
இறப்பு மார்ச்சு 10, 1978(1978-03-10) (அகவை 58)
கொழும்பு
பிள்ளைகள் வாகீசுவரன், துஷ்யந்தி[1]
படித்த கல்வி நிறுவனங்கள் இலங்கை சட்டக் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைச் சுருக்கம்தொகு

குமாரசுவாமி யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரியில் வழக்கறிஞர் வேலுப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய குமாரசாமி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் துணை அதிபரானார்.[3] பின்னர் துணை உணவுக் கட்டுப்பாட்டதிகாரியாகப் பணியாற்றிய பின்னர்,[3] இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று[3] கொழும்பில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியலில்தொகு

குமாரசுவாமி சட்டக்கல்லூரியில் படிக்கும் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 1948 ஆம் ஆண்டில் தமிழ் காங்கிரசு கட்சி டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் அரசில் இணைந்ததை அடுத்து குமாரசுவாமி நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][5] துணை நிதி அமைச்சராகவும், துணை உணவு, விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.[3]

1952 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] 1953 ஆம் ஆண்டில் தமிழ்க் காங்கிரசு கட்சி அரசில் இருந்து விலகினாலும், குமாரசுவாமி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தார்.[7] ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து குமாரசுவாமி 1956 இல் அக்கட்சியை விட்டு வெளியேறினார்.[7]

குமாரசுவாமி 1956 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தமிழரசுக் கட்சி வேட்பாலர் வி. என். நவரத்தினத்திடம் தோற்றார்.[1][8] பின்னர் மார்ச் 1960,[9] 1970[10] தேர்தல்களில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நவரத்தினத்திடம் தோற்றார்.[11]

சமூகப் பணிதொகு

குமாரசாமியின் முயற்சியினால் சாவகச்சேரியில் நீதிமன்றம் ஒன்று உருவானது.[3] சாவகச்சேரி இந்துக் கல்லூரியை "ஏ" தரமாக உயர்த்தினார்.[3] சாவகச்சேரியில் மகளிர் பாடசாலை ஒன்றை உருவாக்கினார்.[3] கைதடி வயோதிபர் இல்லம் இவரது முயற்சியினால் உருவாக்கப்பட்டது.[3]

மறைவுதொகு

குமாரசாமி குருநாகலில் உள்ள தனது பண்ணைக்குச் சென்ற வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 1978 மார்ச் 10 ஆம் நாள் தனது 58-ஆவது அகவையில் காலமானார்.[12]

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 90. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
 2. "Directory of Past Members: Kumaraswamy, Velupillai". இலங்கை நாடாளுமன்றம்.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "அமரர் குமாரசாமிக்கு நீதிமன்றத்தில் அஞ்சலி". ஈழநாடு (யாழ்ப்பாணம்). 16 மார்ச் 1978. 
 4. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 5. Rajasingham, K. T.. "Chapter 14: Post-colonial realignment of political forces". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/CK10Df03.html. 
 6. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 7. 7.0 7.1 Rajasingham, K. T.. "Chapter 15: Turbulence in any language". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/CK17Df01.html. 
 8. "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 9. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 10. "Result of Parliamentary General Election 1970". Department of Elections, Sri Lanka.
 11. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 12. "குமாரசாமி காலமானார்". ஈழநாடு (யாழ்ப்பாணம்). 11 மார்ச் 1978. http://noolaham.net/project/352/35105/35105.pdf. பார்த்த நாள்: 29 மே 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._குமாரசுவாமி&oldid=3083199" இருந்து மீள்விக்கப்பட்டது