இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970

இலங்கை அரசாங்கத் தேர்தல்கள்

இலங்கையின் 7வது நாடாளுமன்றத் தேர்தல் 1970 மே 27 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.

இலங்கையின் 7வது நாடாளுமன்றத் தேர்தல், 1970

← 1965 27 மே 1970 1977 →

இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 151 இடங்கள்
பெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவை
  First party Second party Third party
 
தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா என். எம். பெரேரா டட்லி சேனநாயக்கா
கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
தலைவரான
ஆண்டு
1960 1947 1952
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
அத்தனகலை எட்டியாந்தோட்டை டெடிகமை
முந்தைய
தேர்தல்
41 10 66
வென்ற
தொகுதிகள்
91 19 17
மாற்றம் 50 9 49
மொத்த வாக்குகள் 1,839,979 433,224 1,892,525
விழுக்காடு 36.86% 8.68% 37.91%

முந்தைய பிரதமர்

டட்லி சேனநாயக்கா
ஐக்கிய தேசியக் கட்சி

பிரதமர்-தெரிவு

சிறிமாவோ பண்டாரநாயக்கா
இலங்கை சுதந்திரக் கட்சி

பின்னணி

தொகு

முக்கிய எதிர்க்கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மார்க்சிய இடதுசாரிகளுடன் நீண்டகால கூட்டணியை ஏற்படுத்துவதே சரியானதாகும் எனத் தீர்மானித்தார்.. இதற்கமைய அவர் திரொக்சியவாதிகளான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினார். பொதுத் திட்டம் என அழைக்கப்பட்ட இவர்களின் கூட்டுத் திட்டத்தில், பரவலான தேசியமயமாக்கல், சோவியத் சார்பு வெளியுறவுக் கொள்கை, சோல்பரி அரசியலமைப்பை ஒழித்தல் போன்றவை முக்கிய அம்சங்களாக இருந்தன.

மாறாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு முதலாளித்துவப் போக்கைக் கடைப்பிடித்து வந்தது. அது பணக்காரர்களின் கட்சி என்ற பெயரைப் பெற்றது. இதனால் சாதாரண மக்களிடையே ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரசாரங்கள் எளிதில் செல்வாக்கைப் பெற்றது.

முடிவுகள்

தொகு

ஐக்கிய முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தம் 151 இடங்களில் ஐக்கிய முன்னணி 116 இடங்களைக் கைப்பற்றியது. தமிழ் பேசும் பகுதிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் பின்னர் ஐக்கிய முன்னணியில் இணைந்தனர்.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இடம்பெற்ற தேர்தல்களில் 1970 தேர்தல்களே கடைசித் தேர்தல்களாகும். 1972, மே 22 ஆம் நாள் காலனித்துவ டொமினியன் ஆதிக்கத்தில் இருந்த இலங்கை அதனைக் கைவிட்டு குடியரசானது.

பிரித்தானியர் வசம் இருந்த தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டன. அத்துடன் வறிய கிராம மக்களுக்கு நிலம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் % இடங்கள்
  இலங்கை சுதந்திரக் கட்சி 108 1,839,979 36.86 91
  லங்கா சமசமாஜக் கட்சி 23 433,224 8.68 19
  ஐக்கிய தேசியக் கட்சி 130 1,892,525 37.91 17
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 19 245,727 4.92 13
  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 9 169,199 3.39 6
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 12 115,567 2.32 3
  மகாஜன எக்சத் பெரமுன 4 46,571 0.93 0
ஏனையோர் 136 249,006 4.99 2
செல்லுபடியான வாக்குகள் 441 4,991,798 100.00 151
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவான மொத்த வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள்1
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 5,505,028
Turnout2
Source: Sri Lanka Statistics
1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
2. வெலிமடைத் தேர்தல் தொகுதியில் ஆர். எம். பண்டார (ஐமு) போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  • "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2011-11-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  • "1970 General Election Results". LankaNewspapers.com.
  • "Table 37 Parliament Election (1970)". Sri Lanka Statistics. 10 February 2009.
  • "Sri Lanka Parliamentary Chamber: Parliament Elections Held in 1970" (PDF). Inter-Parliamentary Union.
  • Rajasingham, K. T. (5 January 2002). "Chapter 21: A further lack of perspicuity". Sri Lanka: The Untold Story. Asia Times. Archived from the original on 17 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)