இலங்கை பிரதிநிதிகள் சபை
இலங்கை பிரதிநிதிகள் சபை (House of Representatives of Ceylon) என்பது 1947 முதல் 1972 வரையான காலப்பகுதியில் இருந்த இலங்கை நாடாளுமன்றத்தின் கீழவையாகும். 1947 ஆம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பு மூலம் இலங்கை அரசாங்க சபை கலைக்கப்பட்டு மேலவையான செனட் சபையுடன் இணைந்து பிரதிநிதிகள் சபை நிறுவப்பட்டது. இவை இரண்டும் இணைந்தது இலங்கை நாடாளுமன்றம் ஆகும். கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்க சபைக் கட்டடத்தில் இச்சபையின் அமர்வுகள் இடம்பெற்றன. 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் இதன் முதல் அமர்வு இடம்பெற்றது. இலங்கையின் முதலாவது குடியரச் அரசியலமைப்பு 1972, மே 22 இல் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இரண்டு அவைகளும் இணைந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒருமன்ற முறையாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது.
House of Representatives of Ceylon இலங்கை பிரதிநிதிகள் சபை | |
---|---|
வகை | |
வகை | கீழவை |
காலக்கோடு | |
குடியேற்ற நாடு | இலங்கை |
தோற்றம் | 1947 |
முன்னிருந்த அமைப்பு | இலங்கை அரசாங்க சபை |
பின்வந்த அமைப்பு | தேசிய அரசுப் பேரவை |
கலைப்பு | 1972 |
தலைமையும் அமைப்பும் | |
உறுப்பினர்கள் | 101 (1947-1960) 157 (1960-1972) |
தேர்தல் | |
இறுதித் தேர்தல் | இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970 |
தலைமையகம் | |
கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள இலங்கையின் பழைய நாடாளுமன்றக் கட்டடம். இக்கட்டடம் இலங்கை நாடாளுமன்றத்தினால் 1982 வரை பயன்படுத்தப்பட்டது. இப்போது இங்கு இலங்கை அரசுத்தலைவரின் செயலகம் அமைந்துள்ளது. |
உறுப்பினர்கள்
தொகுஆரம்பத்தில் பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 95 பேர் 89 தேர்தல் தொகுதிகளில் இருந்து நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறு பேர் இலங்கையின் மகாதேசாதிபதியால் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ("Members of Parliament").
சோல்பரி அரசியலமைப்பின் நான்காவது திருத்தத்தின் மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 157 ஆக (151 பேர் தேர்தல் மூலமும் 6 பேர் நியமனம் மூலமும்) அதிகரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- "CEYLON (CONSTITUTION) ORDER IN COUNCIL". LawNet, Government of Sri Lanka. Archived from the original on 2010-07-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
- "CONSTITUTIONAL REFORMS SINCE INDEPENDENCE". The Official Website of the Government of Sri Lanka. Archived from the original on 2014-12-21. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
- Rajasingham, K. T. "Chapter 11: On the threshold of freedom". SRI LANKA: THE UNTOLD STORY. Archived from the original on 2011-08-04. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
- "First election on party basis". Sunday Times (Sri Lanka). 4 March 2007. http://sundaytimes.lk/040307/plus/4.html.