இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952

இலங்கையின் 2வது நாடாளுமன்றத் தேர்தல் 1952 மே 24 முதல் மே 30 வரை நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.

இலங்கையின் 2வது நாடாளுமன்றத் தேர்தல் (1952)

← 1947 24-30 மே 1952 1956 →

இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 95 இடங்கள்
  First party Second party Third party
 
தலைவர் டட்லி சேனநாயக்கா எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா என். எம். பெரேரா
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி
தலைவரான
ஆண்டு
1952 1951 1947
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
டெடிகமை அத்தனகலை ருவான்வெல்ல
வென்ற
தொகுதிகள்
54 9 9
மாற்றம் 12 1
மொத்த வாக்குகள் 1,026,005 361,250 305,133
விழுக்காடு 44.08% 15.52% 13.11%

முந்தைய பிரதமர்

டட்லி சேனநாயக்கா
ஐக்கிய தேசியக் கட்சி

பிரதமர்-தெரிவு

டட்லி சேனநாயக்கா
ஐக்கிய தேசியக் கட்சி

பின்னணி தொகு

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் பிரதமருமான டி. எஸ். சேனநாயக்கா மார்ச் 1952 இல் இறந்ததை அடுத்து அவரது மகன் டட்லி சேனநாயக்கா கட்சித் தலைவராகவும், இடைக்காலப் பிரதமரும் ஆனார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த சிங்களத் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சி இத்தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்டது. இதே போல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஐதேக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததனால் அக்கட்சியில் இருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பிரிந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் முதல் தடவையாகப் போட்டியிட்டனர்.

முடிவுகள் தொகு

இலங்கையின் மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டமையினால் அவர்களின் ஒரேயொரு அரசியல் கட்சியான இலங்கை இந்தியக் காங்கிரஸ் இத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை. லங்கா சமசமாஜக் கட்சியினர் இத்தேர்தலில் 9 இடங்களையே பெற்றுத் தோல்வியுற்றனர். ஐதேக பெரும்பான்மையிடங்களைக் கைப்பற்றியது.

கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய தேசியக் கட்சி 81 1,026,005 44.08 54
  இலங்கை சுதந்திரக் கட்சி 48 361,250 15.52 9
  லங்கா சமசமாஜக் கட்சி 39 305,133 13.11 9
  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி /
விப்லவகாரி லங்கா சமசமாஜக் கட்சி
19 134,528 5.78 4
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 64,512 2.77 4
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 7 45,331 1.95 2
தொழிற் கட்சி 5 27,096 1.16 1
குடியரசுக் கட்சி 9 33,001 1.42 0
பௌத்த குடியரசுக் கட்சி 3 3,987 0.17 0
சுயேட்சை 88 326,783 14.04 12
செல்லுபடியான வாக்குகள் 306 2,327,626 100.00 95
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த வாக்குகள்
மொத்த வாக்காளர்கள்1 2,114,615
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 2,990,912
Turnout 70.70%
Source: Sri Lanka Statistics
1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கோள்கள் தொகு

  • "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 4 February 2016.
  • "1952 General Election Results". LankaNewspapers.com.
  • "Table 32 Parliament Election (1952)". Sri Lanka Statistics. 10 February 2009.
  • Rajasingham, K. T. (10 November 2001). "Chapter 14: Post-colonial realignment of political forces". Sri Lanka: The Untold Story. Asia Times. Archived from the original on 14 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)