1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1948 Summer Olympics) அலுவல்முறையாக பதினான்காம் ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the XIV Olympiad) ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்தில் இலண்டன் நகரில் நட்பெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெர்லினில் நடைபெற்ற 1936 ஒலிம்பிக்கை அடுத்து இரண்டாம் உலகப் போரினால் 12-ஆண்டுகள் தடைபட்டு மீண்டும் நடந்த முதல் ஒலிம்பிக்காக இது அமைந்திருந்தது. 1940 ஒலிம்பிக் தோக்கியோவில் நடைபெறுவதாக இருந்து பின்னர் எல்சிங்கிக்கு மாற்றப்பட்டது; 1944 ஒலிம்பிக் முதலில் இலண்டனில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. 1908க்குப் பிறகு இரண்டாம் முறையாக இலண்டன் இந்தப் போட்டிகளை நடத்தியது. மீண்டும் 2012இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி மூன்று முறை நடத்திய ஒரே நகரமாக இலண்டன் விளங்குகின்றது.

Games of the XIV Olympiad
The Palace of Westminster, a Gothic architecture building with two towers, sits behind the Olympic rings. The words "XIVth Olympiad" is written across the top in a semi-circular shape, while the words "London 1948" is written at the bottom of the logo.
Emblem of the 1948 Summer Olympics
நடத்தும் நகரம்இலண்டன், United Kingdom
பங்குபெறும் நாடுகள்59
வீரர்கள்4,104 (3,714 men, 390 women)
நிகழ்ச்சிகள்136 in 17 sports (23 disciplines)
துவக்கம்29 July 1948
நிறைவு14 August 1948
திறந்து வைத்தவர்
தீச்சுடர் ஏற்றியோர்
அரங்குWembley Stadium
கோடைக்காலம்
குளிர்காலம்

போருக்குப் பிந்தைய பங்கீடலாலும் பொருளியல் நிலையாலும் இந்த ஒலிம்பிக் சிக்கன ஒலிம்பிக் எனப்பட்டது. போட்டிகளுக்காக புதிய விளையாட்டரங்கள் கட்டப்படவில்லை. போட்டியாளர்கள் ஒலிம்பிக் சிற்றூருக்கு மாறாக ஏற்கெனவே இயங்கிவந்த தங்குவிடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். மிகக் கூடுதலாக 59 நாடுகளிலிருந்து 4,104 போட்டியாளர்கள், (3,714 ஆடவர், 390 பெண்கள்) 19 விளையாட்டுக்களில் கலந்து கொண்டனர். செருமனி, சப்பான் நாடுகள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது; சோவியத் ஒன்றியம் அழைக்கப்பட்ட போதும் அந்நாடு எந்த போட்டியாளரையும் அனுப்பவில்லை. ஐக்கிய அமெரிக்கா மிகுந்த பதக்கங்களையும்,84, மிகுந்த தங்கப் பதக்கங்களையும், 38, வென்றது. போட்டி நடத்திய பிரித்தானியா மூன்று தங்கப் பதக்கம் உட்பட 23 பதக்கங்களை வென்றது.

பங்கேற்ற நாடுகள் தொகு

 
பங்கேற்ற நாடுகள்
 
போட்டியாளர்களின் எண்ணிக்கை

இலண்டன் ஒலிம்பிக்கில் 59 நாடுகள் பங்கேற்றன. பிரித்தானிய கயானா (தற்போது கயானா), பர்மா (தற்போது மியான்மர்), சிலோன் (தற்போது இலங்கை), ஈரான், ஈராக், ஜமேக்கா, கொரியா, லெபனான், பாக்கித்தான், புவேர்ட்டோ ரிக்கோ, சிங்கப்பூர், சிரியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, வெனிசுவேலா நாடுகள் முதன்முதலில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றன.

பதக்க எண்ணிக்கை தொகு

1948 கோடைக்கால ஒலிம்பிக்கில் மிகுந்தப் பதக்கங்களை வன்ற முதல் பத்து நாடுகள்:

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 38 27 19 84
2   சுவீடன் 16 11 17 44
3   பிரான்சு 10 6 13 29
4   அங்கேரி 10 5 12 27
5   இத்தாலி 8 11 8 27
6   பின்லாந்து 8 7 5 20
7   துருக்கி 6 4 2 12
8   செக்கோசிலோவாக்கியா 6 2 3 11
9   சுவிட்சர்லாந்து 5 10 5 20
10   டென்மார்க் 5 7 8 20
12   ஐக்கிய இராச்சியம் (நடத்தும் நாடு) 3 14 6 23
  • போட்டி நடத்திய நாடான பிரித்தானியா 12ஆம் இடத்தில், மூன்று தங்கப் பதக்கஙள் உட்பட 23 பதக்கங்களைப் பெற்றது.[2]

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 International Olympic Committee(13 September 2013). "Factsheet – Opening Ceremony of the Games f the Olympiad". செய்திக் குறிப்பு.
  2. "Medal Table". British Olympic Association. Archived from the original on 18 September 2007. பார்க்கப்பட்ட நாள் 27 April 2010.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
1948 Summer Olympics
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
இலண்டன் (1944)
இரண்டாம் உலகப் போரால் இரத்தானது
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
இலண்டன்

பதினான்காம் ஒலிம்பியாடு (1948)
பின்னர்
எல்சிங்கி