2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2012 Summer Olympics), அலுவல் முறையில் 30வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXX Olympiad) அல்லது இலண்டன் 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன் மாநகரத்தில் நடைபெற்றது. தற்கால உலக ஒலிம்பிக் விளையாட்டை மூன்றாவது முறையாக நடத்தும் பெருமையை இலண்டன் மாநகரம் பெற்றிருக்கின்றது.[2][3]. 1908 மற்றும் 1948 ஆண்டுகளில் இருமுறை இங்கு இவ்விளையாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன.[4][5]

2012 ஒலிம்பிக் போட்டிகள்

1944 ஆண்டு இங்கு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி இரண்டாவது உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நாடுகள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நான்கு முறை (1904, 1932, 1984, 1996) ஒலிம்பிக் நடத்திய அமெரிக்கா உள்ளது. ஜெர்மனி (1936, 1972), ஆஸ்திரேலியா (1956, 2000), பிரான்ஸ் (1900, 1924), கிரேக்கம் (1896, 2004) ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தி உள்ளன.

இதுவரை லண்டன் (இங்கிலாந்து), லாஸ் ஏஞ்சலஸ் (ஐக்கிய அமெரிக்கா), பாரிசு (பிரான்ஸ்), ஏதென்ஸ் (கிரேக்கம்) ஆகிய நகரங்கள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளன. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நகரம் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. ஆனால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு பின் லண்டன் நகரம் முதலிடத்தை தனித்துப் பிடித்துள்ளது.

சூலை 6, 2005இல் சிங்கப்பூரில் நடைபெற்ற 117வது கூட்டத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் நான்கு சுற்று வாக்களிப்புக்குப் பின் இலண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2012 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு மாஸ்கோ, நியூயார்க் நகரம், மாட்ரிட் மற்றும் பாரிசு ஆகிய நகரங்களும் விண்ணப்பித்திருந்தன.[6] வெற்றிபெற்ற ஏலத்திற்கு முன்னாள் ஒலிம்பிக் சாதனையாளர் செபாஸ்டியன் லார்டு கோ தலைமையேற்றிருந்தார்.

இந்த விளையாட்டுக்களுக்கான நிதிநிலை பரிசீலனைகள் மிகுந்த சர்ச்சைக்கு இடமளித்தன[7][8] எனினும் இலண்டனின் பல்வேறு பகுதிகள் பேண்தகு வளர்ச்சி நோக்கத்துடன் மேம்படுத்தப்படுவதால்[9] வரவேற்பும் இருந்தன. விளையாட்டுக்களின் முகனையான குவியமாக புதியதாக கட்டமைக்கப்பட்ட ஒலிம்பிக் பூங்கா உள்ளது. இது கிழக்கு இலண்டனில் ஸ்ட்ராஃபோர்டில் முன்பு தொழிற்பேட்டையாக விளங்கிய 200 எக்டேர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[10] ஏலத்திற்கு முன்பே இருந்த விளையாட்டரங்கங்களை ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்ட்டது.

ஏற்று நடத்த ஏலம்

தொகு
 
இலண்டனில் உள்ள நினைவுத்தூணின் மீது இலண்டன் 2012 ஒலிம்பிக் பதாகை.

2012 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு ஏலப் புள்ளிகள் அளித்திட இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்த சூலை 15 2003 அன்று ஒன்பது நகரங்கள் பங்கெடுத்திருந்தன. அவை: அவானா, இசுத்தான்புல், லைப்சிக், இலண்டன், மாட்ரிட், மாஸ்கோ, நியூ யார்க், பாரிசு, மற்றும் ரியோ டி ஜெனிரோ.

மே 18 2004 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) இவற்றிலிருந்து தேர்வுக்கான நகரங்களை ஐந்தாகக் குறைத்தது: இலண்டன், மாட்ரிட், மாஸ்கோ, நியூ யார்க் மற்றும் பாரிசு.

பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தணிக்கைக் குழு 2005ஆம் ஆண்டின் பெப்ரவரி-மார்ச்சு மாதங்களில் இந்த ஐந்து நகரங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர். இக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு சூன் 6 2005 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் எந்த தரவரிசையோ புள்ளிகளோ தரப்படாவிடினும் மதிப்பீடுகளின்படி பாரிசு முதல்நிலையிலும் இலண்டன் இரண்டாமிடத்திலும் இருந்தன.

இதன்படியும் அண்மைக் காலத்தில் இது பாரிசின் மூன்றாவது முயற்சி என்பதாலும் பாரிசே தேர்ந்தெடுக்கப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 2004இன் ஆகத்தில் இலண்டனுக்கும் பாரிசிற்கும் சமநிலை இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.[11]

சிங்கப்பூரில் சூலை 6 2005 அன்று ராஃபிள்சு நகர கருத்தரங்கு மையத்தில் வெற்றி பெற்ற நகரம் அறிவிக்கப்பட்டது. முதலாவதாக வெளியேறிய நகரம் மாஸ்கோவாகும். தொடர்ந்து நியூயார்க், மாட்ரிட் வெளியேறின. நான்காவது சுற்றின் இறுதியில் பாரிசுக்கு 50 வாக்குகளும் இலண்டனுக்கு 54 வாக்குகளும் கிடைத்து 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திட இலண்டன் உரிமை பெற்றது.[12] அறிவிக்கப்பட்ட 24 மணி நேரங்களுக்குள்ளேயே சூலை 7, 2005இல் இலண்டன் தொடர் வண்டிப் போக்குவரத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடையாக அமைந்தது.[13]

2012 கோடைக்கால ஒலிம்பிக் ஏல முடிவுகள்
நகரம் தேசிய ஒலிம்பிக் குழு சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4
இலண்டன்   ஐக்கிய இராச்சியம் style="text-align:center;"|22 27 39 54
பாரிசு   பிரான்சு 21 25 33 50
மாட்ரிட்   எசுப்பானியா 20 32 31
நியூயார்க் நகரம்   ஐக்கிய அமெரிக்கா 19 16
மாஸ்கோ   உருசியா 15

பங்குபற்றிய நாடுகள்

தொகு
 
அணி உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி
  300+
  100+
  30+
  10+
  5+
  1+

204 தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 இற்கும் அதிகமானோர் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்பட்டது.[14] 2010 ஆம் ஆண்டில் நெதர்லாந்து அண்டிலிசு கலைக்கப்பட்டதை அடுத்து 2011 சூன் மாதத்தில் இடம்பெற்ற பன்னாட்டு குழுவின் 123வது மாநாட்டில் அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்புரிமை திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், இந்நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியுடன் 2012 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றனர். 2011 ஆம் ஆண்டில் உருவான தெற்கு சூடானுக்கு தேசிய ஒலிம்பிக் குழு இல்லாததால் அந்நாட்டின் ஒரேயொரு விளையாட்டு வீரர் குவோர் மாரியல் ஒலிம்பிக் கொடியுடன் போட்டிகளில் பங்கேற்றார்.[15]

போட்டிகள்

தொகு

  • ஓடுதல்
  • தாண்டுதல்
  • எறிதல்

`

தற்காப்புக் கலைகள்

தொகு

ஊர்தி ஓட்டங்கள்

தொகு

குழு விளையாட்டுக்கள்

தொகு

கருவி விளையாட்டுக்கள்

தொகு

நிகழ்ச்சி நிரல்

தொகு
து.வி துவக்க விழா போட்டி நிகழ்வுகள் 1 இறுதிப் போட்டிகள் இ.வி இறுதி விழா
சூலை / ஆகத்து 25
பு
26
வி
27
வெ
28
29
ஞா
30
தி
31
செ
1
பு
2
வி
3
வெ
4
5
ஞா
6
தி
7
செ
8
பு
9
வி
10
வெ
11
12
ஞா
நிகழ்வுகள்
  விழாக்கள் து.வி இ.வி
  வில் வித்தை 1 1 1 1 4
  தட களம் 2 5 7 5 4 4 5 6 8 1 47
  இறகுப்பந்தாட்டம் 1 2 2 5
  கூடைப்பந்தாட்டம் 1 1 2
  குத்துச்சண்டை 3 5 5 13
  சிறு படகோட்டம் 1 1 2 4 4 4 16
  மிதிவண்டி 1 1 2 2 2 1 1 1 3 2 1 1 18
  நீரில் பாய்தல் 1 1 1 1 1 1 1 1 8
  குதிரையேற்றம் 2 1 1 2 6
  வாள்வீச்சு (விளையாட்டு) 1 1 1 1 2 1 1 1 1 10
  வளைதடிப் பந்தாட்டம் 1 1 2
  காற்பந்தாட்டம் 1 1 2
  சீருடற்பயிற்சிகள் 1 1 1 1 1 1 3 3 4 1 1 18
  எறிபந்தாட்டம் 1 1 2
  யுடோ 2 2 2 2 2 2 2 14
  தற்கால ஐந்திறப்போட்டி 1 1 2
  துடுப்பு படகோட்டம் 3 3 4 4 14
  பாய்மரப் படகோட்டம் 2 2 2 1 1 1 1 10
  சுடுதல் 2 2 1 1 1 1 2 2 1 2 15
  நீச்சல் 4 4 4 4 4 4 4 4 1 1 34
  ஒருங்கிசைந்த நீச்சல் 1 1 2
  மேசைப்பந்தாட்டம் 1 1 1 1 4
  டைக்குவாண்டோ 2 2 2 2 8
  டென்னிசு 2 3 5
  நெடுமுப்போட்டி 1 1 2
  கைப்பந்தாட்டம் 1 1 1 1 4
  நீர் போலோ 1 1 2
  பாரம் தூக்குதல் 1 2 2 2 2 2 1 1 1 1 15
  மற்போர் 2 3 2 2 2 2 3 2 18
மொத்த நிகழ்வுகள் 12 14 12 15 20 18 22 25 23 18 21 17 22 16 32 15 302
திறள் மொத்தம் 12 26 38 53 73 91 113 138 161 179 200 217 239 255 287 302
சூலை / ஆகத்து 25
புத
26
வி
27
வெ
28
29
ஞா
30
தி
31
செ
1
பு
2
வி
3
வெ
4
5
ஞா
6
தி
7
செ
8
பு
9
வி
10
வெ
11
12
ஞா
நிகழ்வுகள்

உலக சாதனை அளவைகள்

தொகு

இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏழு விளையாட்டுக்களில் 31 சாதனை அளவைகள் எட்டப்பட்டன. மிகக் கூடுதலாக நீச்சற் போட்டிகளில் 9 சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இவற்றில் ஆறு அமெரிக்க விளையாட்டாளர்களால் நிகழ்த்தப்பட்டன.

நாள் நிகழ்ச்சி விளையாட்டாளர் நாடு சாதனை விவரம் சான்று
27 சூலை 2012 வில்வித்தை – ஆடவர் தனி இம் டோங்-உன்   தென் கொரியா தரப்படுத்தும் சுற்றில் உலக சாதனையளவாக 699 எட்டினார் [43]
27 சூலை 2012 வில்வித்தை – ஆடவர் அணி இம் டோங்-உன்
கிம் பப்-மின்
ஓ ஜின்-யெக்
  தென் கொரியா தரப்படுத்தும் சுற்றில் உலக சாதனையளவாக 2087 எட்டினர் [43]
28 சூலை 2012 துடுப்பு படகோட்டம் – ஆண்கள் மாலுமியற்ற இணை எரிக் முர்ரே
அமீஷ் பாண்ட்
  நியூசிலாந்து பூர்வாங்க போட்டியில் உலக சாதனை நேரமாக 6:08.50 எட்டினர் [44]
28 சூலை 2012 நீச்சல் – பெண்கள் 400 மீ தனிநபர் கலவை யே சிவென்   சீனா இறுதிப்போட்டியில் உலக சாதனை நேரம் 4:28.43 ஏற்படுத்தினார். [45]
29 சூலை 2012 பாரம் தூக்குதல் – பெண்கள் 53 கிலோ சுல்பியா சின்சன்லோ   கசக்கஸ்தான் கிளீன் & ஜெர்க்கில் உலக சாதனையாக 131 கிலோ தூக்கினார். [46]
29 சூலை 2012 நீச்சல் – பெண்கள் 100 மீ பட்டாம்பூச்சி டானா வொல்மர்   ஐக்கிய அமெரிக்கா உலக சாதனை நேரமாக 55.98 ஏற்படுத்தினார். [47]
29 சூலை 2012 நீச்சல் – ஆண்கள் 100 மீ மார்பக நீச்சல் கேமரூன் வான் டெர் புர்க்   தென்னாப்பிரிக்கா உலக சாதனை நேரம் 58.46 ஏற்படுத்தினார் [48]
30 சூலை 2012 பாரம் தூக்குதல் – ஆண்கள் 62 கிலோ கிம் உன்-யுக்   வட கொரியா உலக சாதனையாக மொத்தம் 327 கிலோ தூக்கினார் [49]
1 ஆகத்து 2012 நீச்சல் – ஆண்கள் 200 மீ மார்பக நீச்சல் தானியல் குயூர்டா   அங்கேரி உலக சாதனை நேரம் 2:07.28 ஏற்படுத்தினார் [50]
1 ஆகத்து 2012 பாரம் தூக்குதல் – ஆண்கள் 77 கிலோ லு சியாஜுன்   சீனா இசுநாட்சு வகையில் உலக சாதனையாக 175 கிலோதூக்கினார்.
உலக சாதனையாக மொத்தமாக 379 கிலோ ஏற்படுத்தினார்
[51]
1 ஆகத்து 2012 நீச்சல் – பெண்கள் 200 மீ மார்பக நீச்சல் ரெபெக்கா சோனி   ஐக்கிய அமெரிக்கா அரையிறுதியில் உலக சாதனை நேரமாக 2:20.00 ஏற்படுத்தினார். [50]
2 ஆகத்து 2012 மிதிவண்டி – பெண்கள் அணி விரைவோட்டம் விக்டோரியா பென்டல்டன்
ஜெசிக்கா வார்னிஷ்
  ஐக்கிய இராச்சியம் தகுதிச்சுற்றில் உலக சாதனை நேரமாக 32.526 ஏற்படுத்தினார்.
2 ஆகத்து 2012 மிதிவண்டி – பெண்கள் அணி விரைவோட்டம் கோங் ஜின்ஜி
குவோ சுயாங்
  சீனா தகுதிச்சுற்றில் உலக சாதனை நேரமாக 32.447 ஏற்படுத்தினார்
முதல் சுற்றில் உலக சாதனை நேரமாக 32.422 ஏற்படுத்தினார்
[52]
2 ஆகத்து 2012 மிதிவண்டி – ஆண்கள் அணி துரத்துதல் எட் கிளான்சி
கெரைன்ட் தோமசு
இசுடீவன் பர்க்
பீட்டர் கென்னா
  ஐக்கிய இராச்சியம் தகுதிச் சுற்றில் உலக சாதனை நேரமாக 3:52.499 ஏற்படுத்தினர்.
இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 3:51.659 ஏற்படுத்தினர்.
[53]
2 ஆகத்து 2012 மிதிவண்டி – ஆண்கள் அணி விரைவோட்டம் பிலிப் இன்டெசு
கிறிஸ் ஹோய்
ஜேசன் கென்னி
  ஐக்கிய இராச்சியம் முதல் சுற்றில் உலக சாதனை நேரமாக 42.747 ஏற்படுத்தினர்.
இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 42.600 ஏற்படுத்தினர்.
[54]
2 ஆகத்து 2012 நீச்சல் – பெண்கள் 200 மீ மார்பக நீச்சல் ரெபெக்கா சோனி   ஐக்கிய அமெரிக்கா இறுதிப் போட்டியில் உலக சாதனை நேரமாக 2:19.59 ஏற்படுத்தினார். [55]
2 ஆகத்து 2012 சுடுதல் – ஆண்கள் 25 மீ விரைவாகச் சுடுதல் கைத்துப்பாக்கி அலெக்சை கிளிமோ   உருசியா தகுதிச்சுற்றில் உலக சாதனை புள்ளியாக 592 ஏற்படுத்தினார். [56]
3 ஆகத்து 2012 மிதிவண்டி– பெண்கள் அணி துரத்துதல் தானியேல் கிங்
லாரா டிராட்
யோனா ரோசெல்
  ஐக்கிய இராச்சியம் தகுதிச் சுற்றில் உலக சாதனை நேரமாக 3:15.669 ஏற்படுத்தினார்.
3 ஆகத்து 2012 சுடுதல் – ஆண்கள் 50 மீ துப்பாக்கி குப்புறப் படுத்தவாறு செர்கி மார்ட்டினோவ்   பெலருஸ் இறுதியாட்டத்தில் உலக சாதனை அளவாக 705.5 ஏற்படுத்தினார்.
3 ஆகத்து 2012 நீச்சல் – பெண்கள் 200 மீ பின் நீச்சல் மிஸ்ஸி பிராங்களின்   ஐக்கிய அமெரிக்கா இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 2:04.06 ஏற்படுத்தினார்.
4 ஆகத்து 2012 சுடுதல் – பெண்கள் ட்ராப் ஜெசிக்கா ரோஸ்ஸி   இத்தாலி தகுதிச் சுற்றில் உலக சாதனையாக 75 எடுத்தார்.
இறுதியில் உலக சாதனை நேரமாக 99 ஏற்படுத்தினார்.
4 ஆகத்து 2012 மிதிவண்டி – பெண்கள் அணி துரத்துதல் தானியேல் கிங்
லாரா டிராட்
யோனா ரோசெல்
  ஐக்கிய இராச்சியம் முதல் சுற்றில் உலக சாதனை நேரமாக 3:14.682 ஏற்படுத்தினார்.
இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 3:14.051 ஏற்படுத்தினார்.
4 ஆகத்து 2012 நீச்சல் – ஆண்கள் 1500 மீ தளையறு நீச்சல் சுன் யாங்   சீனா இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 14:31.02 ஏற்படுத்தினார். [57]
4 ஆகத்து 2012 நீச்சல் – பெண்கள் 4 × 100 மீ கலவை அஞ்சல் மிஸ்ஸி பிராங்களின்
ரெபெக்கா சோனி
டானா வோல்மர்
அல்லிசன் இசுமிட்
  ஐக்கிய அமெரிக்கா இறுதிப் போட்டியில் உலக சாதனை நேரமாக 3:52.05 ஏற்படுத்தினர்.
4 ஆகத்து 2012 பாரம் தூக்குதல் – ஆண்கள் 94 கிலோ இலியா லின்   கசக்கஸ்தான் கிளீன் & ஜெர்க்கில் உலக சாதனை பளுவாக 233 கிலோதூக்கினார்.
மொத்தமாக 418 கிலோ தூக்கி உலக சாதனை ஏற்படுத்தினார்.
[58]
5 ஆகத்து 2012 பாரம் தூக்குதல் – பெண்கள் +75 kg தாத்தியானா காசிரினா   உருசியா இசுநாட்சில் உலக சாதனையாக 151 கிலோதூக்கினார்.
5 ஆகத்து 2012 பாரம் தூக்குதல் – பெண்கள் +75 kg சூ லுலு   சீனா உலக சாதனையாக மொத்தம் 333 கிலோதூக்கினார்.
9 ஆகத்து 2012 ஆண்கள் – 800 மீ டேவிட் ருடிஷா   கென்யா இறுதியோட்டத்தில் உலக சாதனை நேரமாக 1:40.91 iஏற்படுத்தினார்.
10 ஆகத்து 2012 பெண்கள் 4 × 100 மீ அஞ்சல் தியன்னா மாடிசன்
ஐலிசன் பெலிக்சு
பியான்கா நைட்
கார்மெலிட்டா ஜெடர்
  ஐக்கிய அமெரிக்கா இறுதிப்போட்டியில் உலக சாதனை நேரமாக 40.82ஏற்படுத்தினர்.
11 ஆகத்து 2012 பெண்கள் 20 கிமீ நடை எலினா லாஷ்மநோவா   உருசியா உலக சாதனை நேரமாக1:25:02 ஏற்படுத்தினர்.
11 ஆகத்து 2012 ஆண்கள் 4 × 100 மீ அஞ்சல் நெஸ்டா கார்ட்டர்
மைக்கேல் பிரேட்டர்
யோகன் பிளேக்
உசைன் போல்ட்டு
  ஜமேக்கா இறுதிப் போட்டியில் உலக சாதனை நேரமாக 36.84 ஏற்படுத்தினர்.

பதக்கப் பட்டியலில் முதல் பத்து நாடுகள்

தொகு
குறிப்பு

      போட்டி நடத்தும் நாடு ஐக்கிய இராச்சியம்(பிரித்தானியா)

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 46 29 29 104
2   சீனா 38 27 23 88
3   ஐக்கிய இராச்சியம்
29 17 19 65
4   உருசியா 24 26 32 82
5   தென் கொரியா 13 8 7 28
6   செருமனி 11 19 14 44
7   பிரான்சு 11 11 12 34
8   இத்தாலி 8 9 11 28
9   அங்கேரி 8 4 5 17
10   ஆத்திரேலியா 7 16 12 35

பாதுகாப்பு

தொகு

இந்தப் போட்டிகளுக்கான பாதுகாப்பை 10,000 பேர் கொண்ட காவல்துறை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கு உதவியாக 13,500 பேர் கொண்ட பிரித்தானிய படைத்துறையினரும் வான்படை மற்றும் கடற்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளனர். தேம்சு ஆற்றில் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன; ஐரோஃபைட்டர் வானூர்திகள், தரையிலிருந்து வான் தாவும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புச் செலவுகள் £282 மில்லியனிலிருந்து £553 மில்லியனாக உயர்ந்துள்ளது.[59] இந்த ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்கான ஒத்திகை சனவரி 19, 2012 அன்று நடத்தப்பட்டது.[60]

இலண்டனின் பௌ பகுதியில் லெக்சிங்டன் கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் தண்ணீர் தொட்டி மீது ஏவுகணை அமைப்புகள் நிறுவப்படும் என துண்டறிக்கைகள் வழங்கியது.[61][62] இதற்கு சிலர் மிக்க கவலை தெரிவித்தனர்.[61][62] அமைச்சகம் இது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.[61][62]

சூலை 2012இல் ஒலிம்பிக்சிற்கு பாதுகாப்பு அலுவலர்கள் வழங்கவேண்டிய ஜிஎஸ்4 என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் தன்னால் வேண்டிய அளவிற்கு பணிக்கமர்த்த இயலவில்லை என்று கைவிரித்த நிலையில் மேலும் 3500 படைத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊடகங்களில் இதனை விமரிசித்து பல கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

சின்னம்

தொகு

இலண்டன் ஒலிம்பிக்சிற்கான சின்னம் உல்ஃப் ஓலின்சால் வடிவமைக்கப்பட்டு சூன்4, 2007 அன்று வெளியிடப்பட்டது.[63] இந்தச் சின்னம் 2012 எண்ணைக் குறிப்பதாகவும் ஒலிம்பிக் வளையங்களை சூன்யத்தில் உள்ளடக்கியும் உள்ளது.[64]

மாற்றுத்திறனாளர் போட்டிகளுக்கான சின்னமும் (இடது கோடி) பல்வேறு வண்ணங்களில் முதன்மைச் சின்னமும்

மேற்கோள்கள்

தொகு
  1. "Cauldron moved into position in Olympic Stadium". London 2012 Olympic and Paralympic Organizing Committee. Archived from the original on 2012-12-11. பரணிடப்பட்டது 2012-07-31 at the வந்தவழி இயந்திரம்
  2. "International Olympic Committee – London 2012". IOC. பார்க்கப்பட்ட நாள் 3 August 2008.
  3. ஏதென்சும் மூன்றுமுறை ஐஓசியின் நிகழ்வுகளை, 1896, 2004 மற்றும் இடைச்செருகிய விளையாட்டுக்களை 1906இலும் நடத்தியுள்ளது. ஆயின், 1906 விளையாட்டுக்களை தற்போது ஐஓசி அலுவல்முறையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
  4. Barden, Mark (26 April 2008). "London's first Olympics". BBC Sport. http://news.bbc.co.uk/sport1/hi/olympics/7361921.stm. பார்த்த நாள்: 3 August 2008. 
  5. "The 1948 London Olympics Gallery". BBC History. பார்க்கப்பட்ட நாள் 3 August 2008.
  6. "London 2012: Election". International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் 2 October 2009.
  7. "London plan at-a-glance". BBC News. 5 June 2005. http://news.bbc.co.uk/sport1/hi/olympics/london_2012/4025027.stm. பார்த்த நாள்: 2 October 2009. 
  8. "What is the London 2012 Olympics?". politics.co.uk. 24 April 2008. Archived from the original on 18 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 2 October 2009.
  9. "Building a sustainable Games". London 2012. Archived from the original on 18 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 October 2009. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-18. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  10. "Newham London: The Olympic Park". London Borough of Newham. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "London And Paris Tie In 2012 Bid". GamesBids. http://www.gamesbids.com/cgi-bin/news/viewnews.cgi?category=1&id=1093970849. பார்த்த நாள்: 2004-08-31. 
  12. "London beats Paris to 2012 Games". BBC News. 6 July 2005. http://news.bbc.co.uk/sport1/hi/front_page/4655555.stm. 
  13. Culf, Andrew (6 July 2005). "The party that never was: capital marks the games at last—Eight weeks after Olympic celebrations were cut short by bombings, London puts on a low-key spectacle to show it means business". The Guardian (UK) இம் மூலத்தில் இருந்து 2 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081002091306/http://www.guardian.co.uk/uk/2005/sep/02/london.Olympics2012. பார்த்த நாள்: 22 August 2008. 
  14. "Olympics – Countries". BBC Sport. http://www.bbc.co.uk/sport/olympics/2012/countries. பார்த்த நாள்: 19 சூலை 2012. "From the 27th of July 2012 – 204 countries will send more than 10,000 athletes to compete in 300 events" 
  15. "Curtain comes down on 123rd IOC Session". IOC. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2011.
  16. 16.0 16.1 16.2 "Asian Qualification Tournament for London 2012 – Medallists". World Taekwondo Federation. 26 November 2011. Archived from the original (PDF) on 22 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. 17.0 17.1 "Men's Qualification – Weightlifting" (PDF). IWF. பார்க்கப்பட்ட நாள் 13 November 2011.
  18. "World Series of Boxing – Results". AIBA. 28 May 2011. பார்க்கப்பட்ட நாள் 28 May 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  19. 19.00 19.01 19.02 19.03 19.04 19.05 19.06 19.07 19.08 19.09 19.10 19.11 19.12 19.13 19.14 19.15 19.16 19.17 19.18 19.19 19.20 19.21 19.22 19.23 19.24 19.25 19.26 19.27 19.28 19.29 19.30 19.31 19.32 19.33 19.34 19.35 19.36 19.37 19.38 19.39 19.40 19.41 19.42 19.43 19.44 19.45 19.46 19.47 19.48 19.49 19.50 19.51 19.52 19.53 19.54 19.55 19.56 19.57 "iaaf.org – Top Lists". IAAF. பார்க்கப்பட்ட நாள் 4 June 2011.
  20. "Canoeing – Results". COJA: Comissão Organizadora dos X Jogos Africanos. பார்க்கப்பட்ட நாள் 10 Sep 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. 21.00 21.01 21.02 21.03 21.04 21.05 21.06 21.07 21.08 21.09 21.10 21.11 21.12 21.13 21.14 21.15 21.16 21.17 21.18 21.19 21.20 21.21 21.22 21.23 21.24 21.25 21.26 21.27 21.28 21.29 21.30 21.31 21.32 21.33 21.34 21.35 21.36 21.37 21.38 21.39 21.40 21.41 21.42 21.43 21.44 21.45 21.46 21.47 21.48 21.49 21.50 "Quota places by NATION and Name". ISSF. 8 March 2011. பார்க்கப்பட்ட நாள் 19 March 2011.
  22. Azerbaijan wins first license for 2012 Olympic Games in London. News.az. 23 June 2011
  23. 23.0 23.1 23.2 23.3 "LONDON 2012 OLYMPIC PLACES ANNOUNCED FOLLOWING ALLTECH FEI WORLD EQUESTRIAN GAMES". FEI. 14 October 2010. Archived from the original on 7 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 19 March 2011.
  24. 24.0 24.1 "Qualifers From Africa For Olympic Games London 2012" (PDF). ITTF. 13 September 2011. Archived from the original (PDF) on 15 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  25. "African Qualification Tournament for 2012 London Olympics". WTF. 12 January 2012. Archived from the original on 23 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  26. "Brazil reign again, Colombia make history". FIFA. 22 November 2010. Archived from the original on 11 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 19 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-12. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  27. "Canoe Slalom Olympic Qualifiers" (PDF). Archived from the original (PDF) on 2012-08-02. பார்க்கப்பட்ட நாள் 2012-03-04.
  28. "Moumin Geele Profile". IAAF. பார்க்கப்பட்ட நாள் 7 August 2011.
  29. 29.0 29.1 29.2 "Eritrea's Daniel Teklehaimanot wins 3rd African Title in Cycling; Ethiopia finished third". nazret.com. 15 January 2010. Archived from the original on 24 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2011.
  30. 30.0 30.1 30.2 30.3 30.4 "Direct Qualifiers for 2012 London Olympic Games – Provisional list" (PDF). International Table Tennis Federation. Archived from the original (PDF) on 9 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  31. "Ásdís tryggði sér sæti á HM og ÓL" (webpage). mbl.is. பார்க்கப்பட்ட நாள் 2 August 2011.
  32. "Six more countries qualify for the Olympic Games". World Archery. 24 October 2011. Archived from the original on 31 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  33. "PLAYERS QUALIFIED FOR THE 2012 LONDON OLYMPIC GAMES" (PDF). ITTF. 20 October 2011. Archived from the original (PDF) on 19 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 20 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  34. "Tarptautinė lengvosios atletikos federacija paskelbė Londono olimpiados normatyvus" (in Lithuanian). பார்க்கப்பட்ட நாள் 25 May 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  35. "World Archery 2011 Results Summary, Team Ranking" (PDF). International Archery Federation. Archived from the original (PDF) on 8 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  36. "Pakistan seal London 2012 berth with Asian Games triumph". International Hockey Federation. 25 November 2010. Archived from the original on 13 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 25 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  37. 37.0 37.1 "Oceania Taekwondo Qualification Tournament wrapped up with great success". World Taekwondo Federation. 11 September 2011. Archived from the original on 23 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 11 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  38. "Barriga Qualifies for London Olympics". PhilBoxing. 8 October 2011. பார்க்கப்பட்ட நாள் 8 October 2011.
  39. "Quota places for 2012 Olympic Games London" (PDF). European Aquatics. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 25 May 2011.
  40. "Brazil hit heights once more". FIFA. 14 February 2011. Archived from the original on 17 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 25 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  41. "Times". FINA. Archived from the original on 6 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  42. "Phuoc qualifies for London 2012". Viet Nam News. 17 May 2011. http://vietnamnews.vnagency.com.vn/Sports/211373/Phuoc-qualifies-for-London-2012-.html. பார்த்த நாள்: 25 May 2011. 
  43. 43.0 43.1 "Im Dong Hyun posts first world record of London 2012 Olympics". Olympics Metal Tally. 27 July 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
  44. "New Zealand pair Hamish Bond, Eric Murray set world best time at Olympic rowing regatta". The Washington Post. Associated Press. 28 July 2012. http://www.washingtonpost.com/sports/new-zealand-pair-hamish-bond-eric-murray-set-world-best-time-at-olympic-rowing-regatta/2012/07/28/gJQAMqGnFX_story.html. பார்த்த நாள்: 28 July 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  45. "Ye Shiwen of China sets world record to win Olympic gold in women's 400 IM". Newsday (New York). 28 July 2012. http://www.newsday.com/sports/ye-shiwen-of-china-sets-world-record-to-win-olympic-gold-in-women-s-400-im-1.3866999. பார்த்த நாள்: 28 July 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  46. "Women's 53kg Results". London 2012. 29 July 2012 இம் மூலத்தில் இருந்து 5 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121205095912/http://www.london2012.com/weightlifting/event/women-53kg/index.html?v=20120729-152516477. பார்த்த நாள்: 29 July 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  47. "Dana Vollmer sets world record in 100 fly". Newsday. New York. 29 July 2012. பார்க்கப்பட்ட நாள் 29 July 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  48. "Sascoc hails van der Burgh on Olympic win". SABC (Johannesburg). 30 July 2012 இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110103345/http://www.sabc.co.za/news/a/10d41a804c296bda9dcdbd6995218ba3/Sascoc-hails-van-der-Burgh-on-Olympic-win-20123007. பார்த்த நாள்: 30 July 2012. 
  49. "Records tumble as Kim takes gold". London 2012. 30 July 2012 இம் மூலத்தில் இருந்து 5 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121205073317/http://www.london2012.com/news/articles/records-tumble-kim-takes-gold.html. பார்த்த நாள்: 30 July 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  50. 50.0 50.1 "Day 5 Review: Adrian, Gyurta celebrate gold success". London 2012. 1 August 2012 இம் மூலத்தில் இருந்து 10 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121210035740/http://www.london2012.com/news/articles/day-review-adrian-gyurta-celebrate-gold-success.html. பார்த்த நாள்: 2 August 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  51. "Lu lifts into record books". London 2012. 1 August 2012 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121216102251/http://www.london2012.com/news/articles/lifts-into-record-books.html. பார்த்த நாள்: 2 August 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  52. Pretot, Julien (2 August 2012). "Olympics-Cycling-China set world record, Britain out". Reuters இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022031519/http://www.reuters.com/article/2012/08/02/oly-cycl-ctwspr-record-day-idUSL6E8J2MQS20120802. பார்த்த நாள்: 2 August 2012. 
  53. "Coach backs GB quartet to go faster". Yahoo! Eurosport. 2 August 2012. http://uk.eurosport.yahoo.com/news/coach-backs-gb-quartet-go-faster-225010484.html. பார்த்த நாள்: 2 August 2012. 
  54. "Hoy claims fifth gold". London 2012. 2 August 2012 இம் மூலத்தில் இருந்து 10 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121210120641/http://www.london2012.com/news/articles/hoy-claims-fifth-gold.html. பார்த்த நாள்: 2 August 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  55. "Soni smashes world record to claim gold". London 2012. 2 August 2012 இம் மூலத்தில் இருந்து 16 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121216090603/http://www.london2012.com/news/articles/soni-smashes-world-record-for-gold.html. பார்த்த நாள்: 2 August 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  56. "Men's 25m Rapid Fire Pistol". London 2012. 2 August 2012. Archived from the original on 6 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 August 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  57. "Sun shatters 1500m WR at Olympics, Fogg eighth". Yahoo! Eurosport. 4 August 2012. http://uk.eurosport.yahoo.com/news/sun-shatters-1500m-wr-olympics-fogg-eighth-190203974.html. பார்த்த நாள்: 4 August 2012. 
  58. "Men's 94kg". London 2012. 4 August 2012. Archived from the original on 4 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 August 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  59. "London 2012: 13,500 troops to provide Olympic security". BBC News. 15 December 2011. http://www.bbc.co.uk/news/uk-16195861. 
  60. Seida, Jim (19 January 2012). "Metropolitan Police and the Royal Marines perform security exercises in preparation for London Olympics" பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம். MSNBC.
  61. 61.0 61.1 61.2 Booth, Robert (29 April 2012). "London rooftops to carry missiles during Olympic Games". The Guardian (London). http://www.guardian.co.uk/sport/2012/apr/29/london-rooftops-missiles-olympic-games. பார்த்த நாள்: 29 April 2012. 
  62. 62.0 62.1 62.2 "London Olympics 2012: MoD rooftop missile base plan alarms local residents". The Daily Telegraph (London). 29 April 2012 இம் மூலத்தில் இருந்து 29 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120429213246/http://www.telegraph.co.uk/sport/olympics/news/9234544/London-Olympics-2012-MoD-rooftop-missile-base-plan-alarms-local-residents.html. பார்த்த நாள்: 29 April 2012. 
  63. "London unveils logo of 2012 Games". BBC Sport. 4 June 2007 இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070613121003/http://news.bbc.co.uk/sport2/hi/other_sports/olympics_2012/6718243.stm. பார்த்த நாள்: 5 July 2007. 
  64. "The new London 2012 brand". London 2012. 4 June 2007. Archived from the original on 6 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 4 June 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-06. பார்க்கப்பட்ட நாள் 2012-07-26.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


அலுவல்முறை
செய்தி ஊடகங்கள்
முன்னர் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
இலண்டன்

XXX ஒலிம்பியட் (2012)
பின்னர்