குதித்தெழு மேடைப் பயிற்சி
குதித்தெழு மேடைப் பயிற்சி (Trampolining) ஓர் ஒலிம்பிக் போட்டி விளையாட்டு ஆகும். குதித்தெழு மேடை ஒன்றின்மீது துள்ளியவண்ணம் சீருடற்பயிற்சியாளர்கள் கரணங்கள் நிகழ்த்துவர்.[1] பைக் (கைகள் காலடிகளைப் பிடித்தவண்ணம் கைகளும் கால்களும் மடக்காது) டக் (முழங்கால்களை நெஞ்சோடு கையால் அணைத்தவாறு) மற்றும் இசுடிராடில் (கைகளால் கணுக்காலைப் பிடித்துக்கொண்டு கால்களை முக்கோண வடிவில் வைத்தல்) நிலைகளில் எளிய குதித்தல்கள் முதல் முன்பக்க அல்லது பின்பக்க குட்டிக்கரணங்களுடனும் உதற்சுழற்சிகளுடனும் சிக்கலான பயிற்சிகள் வரை இவற்றில் அடங்கும்.
மூன்று தொடர்புடைய குதித்தெழு விளையாட்டுக்கள் உள்ளன:ஒத்திசைந்த குதித்தெழு மேடைப் பயிற்சி, தொடர் உடல் சுழற்றல் மற்றும் இரட்டை சிறு-குதித்தெழு மேடை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "FIG website - History of Trampoline Gymnastics". Archived from the original on 2009-12-17. பார்க்கப்பட்ட நாள் 2012-05-22.