கரணம்
கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது கரணம் என்பது 6 பாகைமணிகள் ஆகும்.[சான்று தேவை] திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு.[சான்று தேவை] ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.[சான்று தேவை]
கரணங்கள்
தொகுஎண் | கரணம் |
---|---|
1 | பவ |
2 | பாலவ |
3 | கௌலவ |
4 | தைதூலை |
5 | கரசை |
6 | வணிசை |
7 | பத்தரை |
8 | சகுனி |
9 | சதுஷ்பாதம் |
10 | நாகவம் |
11 | கிம்ஸ்துக்னம் |