குதிரைக் கரடு (சீருடற்பயிற்சி)

குதிரைக் கரடு (Pommel horse) ஓர் கலைநய சீருடற்பயிற்சி கருவியாகும். மரபாக, இதனை ஆண் சீருடற் பயிற்சியாளர்களே பயன்படுத்தி வந்துள்ளனர். துவக்கத்தில் இது மாழை சட்டகத்தில் மர விட்டத்தின் மீது தோல் போர்த்தியதாக இருந்தது. தற்கால கருவிகளில் மாழை விட்டத்தின் மீது நுரை மீள்மமும் தோலும் போர்த்தப்பட்டு நெகிழி கைப்பிடிகளுடன் (கரடு) தயாரிக்கப்படுகின்றன.[1]

குதிரைக் கரடில் தனதுத் திறன்களை வெளிக்காட்டும் சீருடற்பயிற்சியாளர்.
குதிரைக் கரடில் மாரியசு ஊர்சிகா

போட்டிக் கருவிதொகு

வரலாறுதொகு

 
துவக்க கால குதிரைக்கரடு - செருமானிய அருங்காட்சியகம்.

குதிரைக் கரடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே படை வீரர்களால் செயற்கை குதிரையாக அமைக்கப்பட்டு குதிரை ஏற்றம்/இறக்கம் பழக பயன்படுத்தப்பட்டு வந்தது.[1] பேரரசன் அலெக்சாந்தர் கூட இதனைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.[1]

அளவைகள்தொகு

பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருவி அளவைகள் சிற்றேட்டின்படி:

  • தரையிலிருந்து மேற்பரப்பிற்கான உயரம்: 115 சென்டிமீட்டர்கள் (3.77 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]
  • மேலே நீளம் : 160 சென்டிமீட்டர்கள் (5.2 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]
  • கீழே நீளம்: 155 சென்டிமீட்டர்கள் (5.09 ft) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]
  • அகலம் - மேலே : 35 சென்டிமீட்டர்கள் (14 in) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]
  • அகலம் - கீழே: 30 சென்டிமீட்டர்கள் (12 in) ± 1 சென்டிமீட்டர் (0.39 in)[2]
  • கரடுகளின் உயரம்: 12 சென்டிமீட்டர்கள் (4.7 in) ± 0.5 சென்டிமீட்டர்கள் (0.20 in)[2]
  • கரடுகளுக்கிடையேயான தொலைவு: 40 சென்டிமீட்டர்கள் (16 in) - 45 சென்டிமீட்டர்கள் (18 in) (adjustable)[2]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Janssen & Fritsen presents: History of the Pommel Horse". 2010-03-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Apparatus Norms". FIG. p. II/14. 2011-12-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-10-07 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு