மென்பந்தாட்டம்
மென்பந்தாட்டம் அடிபந்தாட்டைத்தை பெரிதும் ஒத்த ஐக்கிய அமெரிக்காவில் தோன்றிய ஒரு குழு விளையாட்டு ஆகும். அடிபந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்து சிறிதாகவும் (23 cm சுற்றளவு) கடினமானதாகவும் இருக்கும். மென்பந்தாட்டத்தில் பயன்படும் பந்து அதைவிட பெரிதாகவும் (30 cm சுற்றளவு) சற்று மெதுவானதாகவும் இருக்கும். அடிபந்தாட்டத்தில் எறிபவர் இடுப்புக்கு மேலே தனது கைகளை உயர்த்தி எறிவர். மென்பந்தாட்டதில் எறிபவர் இடுப்புக்குகீழே தனது கைகளை கொண்டுவந்து எறிவர். இவையே அடிப்படை வேறுபாடு.
இலங்கை வழக்கில் மென்பந்து என்பதை டென்னிஸ் பந்தைத் குறிப்பிடுவும் பயன்படுத்தப்படுவதுண்டு.