மிதிவண்டி ஓட்டப்பந்தயம்
மிதிவண்டி வைத்து விளையாடப்படும் ஒரு விளையாட்டு வகை
மிதிவண்டி ஓட்டப்பந்தயம், உடல் வலுவைப் பயன்படுத்தி மிதிவண்டியை பல்வேறு வகையான ஓடுதடங்களில் விரைவாக ஓட்டிச் செல்லும் போட்டி ஆகும். இப்போட்டிகளில் நான்கு முக்கிய வகைகள் உண்டு. இவை ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம்பெறுகின்றன. அவையாவன:
- சாலை மிதிவண்டிப் போட்டி (road cycling)
- மலைவழி மிதிவண்டிப் போட்டி (moutain cycling)
- தடகள மிதிவண்டியோட்டம் (track cycling)
- பி.எம்.எக்ஸ் போட்டி (கடுவெளி மிதிவண்டிப்போட்டி அல்லது மோட்டர் கிராசு மிதிவண்டிப்போட்டி) ( BMX cycling)
வரலாறு
தொகுமுதன் முதலாக மே 31, 1868ல் பாரிசில் பார்க் டி செயின் குலோடு (Parc de Saint-Cloud) என்னும் இடத்தில் 1,200 மீட்டர் தொலைவு மிதிவண்டி ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஜேம்ஸ் மூர் என்னும் ஆங்கிலேயர் மரத்தால் செய்த, இரும்புப் பட்டை கொண்ட ஆழிகள் (சக்கரங்கள்) உடைய மிதிவண்டியை ஓட்டி வெற்றி பெற்றார் [1]. இம்மிதிவண்டி இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ்ஷயர் என்னும் பகுதியில், எலை (Ely) என்னும் இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ Maso, B. (tr. Horn, M.) (2005), The Sweat of the Gods, Mousehold Press, pp. 1-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-874739-37-4