கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்

கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள் என்பது கிறிஸ்தோபர் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டில் அமெரிக்கா கண்டத்திற்குச் சென்ற ஆண்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. ஆரம்ப காலங்களில் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களே ஐரோப்பியர்களால் அறியப்பட்டிருந்தன. எனினும் அறிவியல் முன்னேற்றத்தால் ஐரோப்பியர்கள் பெரும் கடற் பயணங்களை மேற்கொண்டு அவர்கள் ஏனைய கண்டங்களை அறிந்து குடியேறினர். இவற்றுள் முக்கியமான நிகழ்வு அமெரிக்கக் கண்டங்களின் கண்டுபிடிப்பாகும். ஏனெனில் இதுவே முதலாவது நாடுகாண் பயணமாகும். இவரது பயணங்கள் அமெரிக்கக் கண்டங்களில் ஐரோப்பியக் காலனியாதிக்கம் வேரூன்ற வகைசெய்தது. கொலம்பஸ் மொத்தமாக நான்கு முறை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இவற்றுள் முதலாவது கடற்பயணமே அமெரிக்காவின் கண்டுபிடிப்பு எனக் குறிப்பிடப்படுகிறது.

கிறிஸ்தோபர் கொலம்பசின் பயணங்கள்
கொலம்பசின் நான்கு கடற்பயணங்கள்
தேதி1492 முதல் 1504 வரை
நிகழ்விடம்அமெரிக்காக்கள்
பங்கேற்றவர்கள்கொலம்பசும் அவரது மாலுமிகளும்
விளைவுஅமெரிக்காக்களுக்கான ஐரோப்பியர்களின் பயணங்கள்

எவ்வாறாயினும் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடிபதித்த முதல் மனிதரல்ல. இவருக்கு முதலே அங்கு செவ்விந்தியர்கள், மாயன்கள், அஸ்டெக்குகள் போன்றோர் வாழ்ந்திருந்தனர். மேலும், அவர் அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியருமல்ல. உதாரணமாக வைக்கிங்குகள் கி.பி. 1000இலேயே நியூபவுண்லாந்தில் குடியிருப்புகளை அமைத்திருந்தனர். மேலும் அவர் 1498இலேயே பிரதான அமெரிக்க நிலத்தை வந்தடைந்தார்(இதன்போது அவர் தென்னமெரிக்காவை அடைந்தார்). எவ்வாறாயினும், இவரது கண்டுபிடிப்புகள் அப்போதைய ஐரோப்பிய கடலாதிக்க சக்திகளாகத் திகழ்ந்த நாடுகளை அப் புதிய கண்டத்துடன் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளவும்,காலனிகளை உருவாக்கவும்,அங்குள்ள சுதேசிகளிடையே கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும் வழியேற்படுத்தியது. 1492 ஆம் ஆண்டு கொலம்பஸிர்க்கு "பெருங்கடல் கடல் அட்மிரல்" என்ட்ர பட்டம் வழஙப்பட்டது.

கொலம்பஸ் & அரசி இசபெல்லா

பின்னணி

தொகு

ஆரம்ப காலங்களில் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையில் பட்டுப்பாதை மூலம் வர்த்தகம் நடைபெற்றது. இப்பாதையில் ஐரோப்பாவுக்கான முக்கிய வர்த்தக நகரமாக கொன்ஸ்தாந்திநோபிள் செயற்பட்டது. 1453ம் ஆண்டில் இது துருக்கியரால் கைப்பற்றப்பட்டது. இதனால் ஐரோப்பிய வர்த்தகர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர். இவற்றுள்,

  1. உயர்விலைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டியிருந்தமை
  2. தீர்வைகள் உயர்த்தப்பட்டமை
  3. உரிய காலத்தில் பொருட்கள் கிடைக்காமை என்பனவாகும்.

இக்காலப்பகுதியில் ”பெஸ்டர் ஜோன்” என்ற மன்னனின் வலிமை மிக்க கிறிஸ்தவ ராச்சியத்தைப் பற்றிய எண்ணம் ஒன்று ஐரோப்பிய மக்களிடையே பரவியது. எனவே அவனது ராச்சியத்தைக் கண்டுபிடித்து முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டுமென்ற உந்துதலும் அவர்களிடையே மேலோங்கியது. மேலும் தாலமியினால் திசைகாட்டி, தேசப்படம் என்பன கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தூரப்பயணங்களை மேற்கொள்ளும் உந்துதல் ஐரோப்பியரிடையே ஏற்பட்டது.

பயணங்களுக்கான ஆதரவு

தொகு

போர்த்துக்கல்லைச் சேர்ந்த இளவரசன் ஹென்றி, ஸ்பானியாவைச் சேர்ந்த பேர்டினன், இசபெல்லா அரசி போன்றோர் இத்தகைய கடற்பயணங்களை மேற்கொள்வோருக்கு உதவ முன்வந்தனர். இதனால் இளவரசன் ஹென்றி, ”கடலோடி ஹென்றி” எனப்பட்டான். இவன் சென்ட்.வின்சன்ட் முனையில் கடற்பயணச் செயற்பாடுகளைப் பயிற்றுவிக்கும் நிலையமொன்றை நிறுவினான். கி.பி. 1419ல் நிறுவப்பட்ட இந்நிலையத்தில் படவரைஞர்கள், வானியலாளர்கள் போன்ற பலரும் பணியிலமர்த்தப் பட்டனர்.

1492ல் கொலம்பஸ் ஸ்பானிய அரசரின் ஆதரவுடன் தன் கடற் பயணத்தைத் துவக்கினார். கொலம்பஸ் முதலில் காலடி பதித்த இடம் அமெரிக்கா அல்ல. அவர் ஹிஸ்பானியோலா தீவுகளிலேயே காலடி வைத்தார். இது தற்போது ஹெயிட்டியும் டொமினிக்கன் குடியரசும் காணப்படும் தீவாகும்.

பயணங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்

தொகு

முதல் பயணம்

தொகு

1492 ஆம் அண்டு ஆகஸ்ட் 3 அன்று மாலை கொலம்பஸ் மூன்று கப்பல்கள் (நினா,பிண்டா, மற்றும் சாண்டா மரியா) உடன் "காஸ்டிலியன் பாலோஸ் டி லா ஃப்ரொன்டெரா" துறைமுகத்திலிருந்து இருந்து கிளம்பியது. கொலம்பஸ் முதலில் கப்பலேறி அரச ஆட்சி அட்லாண்டிக் பெருங்கடலில் ஆப்பிரிக்கா கடற்கரையின் அருகில் உள்ள கேனரி தீவுகளுக்கு கப்பலை சரிசெய்ய சென்றார்.செப்டம்பர் 6, 1492 இல் மேற்கு நோக்கி அவரது பிரயாணம் தொடங்கியது. அவர் கிளம்பி 29 நாட்களுக்கு பிறகு,அக்டோபர் 7, 1492 இல், குழு மாலுமிகளின் கண்ணில் நிலப்பறவைகள் பட்டது.கொலம்பஸ் தங்களது பயண வழியை மற்றி அப்பறவைகளைப் பின்பற்ற துவங்கினர்.

கொலம்பசின் கப்பலின் உள்ள ரோடிகோ டி ட்ரையனா என்ற மாலுமி மூலம், அக்டோபர் 12 ம் தேதி காலை 2 மணிக்கு முதலில் நிலத்தை பார்த்தார் இதனால், 10,000 மாரவெடிஸ் பரிசு பெற்றார்.கொலம்பஸ், இன்றைய பஹாமாஸ் அல்லது டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவின் சான் சால்வடார் தீவில் இறங்கினார்.பின்னர் அவர் 1493,மார்ச் அன்று ஸ்பெயினை நோக்கி கிளம்பினார்.

இரண்டாவது பயணம்

தொகு

1493 செப்டம்பர் 24, இல் அவர் தனது இரண்டாவது பயணத்திற்காக ஸ்பெயினை விட்டு கிளம்பும் முன், அங்குள்ள உள்ளூர் மக்களுடன் கூட அன்பு, நட்பு உறவு பாராட்டுமாறு பெர்டினாண்ட் மற்றும் இஸபெல்லா ஆகியோரால் அறிவுறுத்தப்பட்டர். இப்பயணத்தின் போது அவர் கரீபிய தீவுகளுக்கு பயனித்தார். நவம்பர் 3, 1493 இல், கிறிஸ்டோபர் கொலம்பஸ் டொமினிக்கா என்ற முரட்டுத்தனமான மக்கள் வசிக்கும் தீவை கண்டறின்தார்.அதே நாளில் அங்கு தரையிறங்கிய அவர் அதற்கு சாண்டா மரியா லா க்லான்டே எனப் பெயரிட்டார்.

மூன்றாம் பயணம்

தொகு

மூன்றாவது பிரயாணத்தின் நோக்கமானது போர்த்துக்கல் மன்னன் இரண்டாம் ஜான் என்பவர்,கேப் வேர்டே தீவுகளின் தென்மேற்கே ஒரு கண்டம் இருப்பதை சரிபார்க்க விரும்பியதே காரணமாக இருந்தது. மே 30, 1498 இல், கொலம்பஸ், ஆறு கப்பல்கள் கொண்ட ஒரு கப்பற்படையுடன் துறைமுகத்தை விட்டு கிளம்பினர், அவற்றில் மூன்று நேரடியாக மேற்கு இந்திய தீவுகளுக்கும் மற்ற மூன்றுடன் அவரது மனைவியின் சொந்த நாடன போர்த்துகீசியத்தின் போர்டோ சாண்டோ தீவுக்கு சென்றார்.அங்கு அவர் சில காலம் கழித்தார் பின்னர் கப்பலேறி கேனரி தீவுகள்,மதேயரா தீவு மற்றும் கேப் வேர்டே தீவுகளை நோக்கி பயணித்தார்.கொலம்பஸ் ஜூலை 31, 1498 இல் டிரினிடாட் தீவின் தெற்கு கடற்கரையில் தரையிறங்கினார்.

நான்காவது பயணம்

தொகு

கொலம்பஸ் இந்திய பெருங்கடலுக்கு மேற்கு நோக்கிய ஒரு பாதையைத் தேடி, நான்காவது பிரயாணம் மேற்கொண்டார்.தனது மாற்றாந்தாய் மகன்களான பார்டோலோமியோ,டைகோ மெண்டஸ் மற்றும் அவரது 13 வயதான மகன் பெர்னாண்டோ சேர்ந்து மே 12, 1502 இல் ஸ்பெயின் கடிட்ஜ்-ஐ விட்டு கிளம்பினர்.அவர் மூர்களின் முற்றுகையின் கீழ் இருந்த போர்த்துகீசிய வீரர்களை மீட்க மொராக்கோ கடற்கரையை நோக்கி கப்பலேறி சென்றார். ஜூன் 15 ம் தேதி, அவர்கள் மார்டீனிகா (Martinica) தீவில் தரையிறங்கினர்.அப்போது அங்கு ஒரு சூறாவளி உருவாகி இருந்தது, அதனால் அவர் தங்குமிடத்தை கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் ஹிஸ்பானியோலாவுக்கு சென்றார்க்ள்.தொடர்ந்து அவர் ஜூன் 29 அன்று டோமிங்கோ வந்தனர் ஆனால் துறைமுகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, புதிய கவர்னர் அவரது புயல் கணிப்பை கேட்க மறுத்து விட்டார். கொலம்பஸின் கப்பல்கள் ஜைன ஆற்றின் வாயை அடைந்த போது சூறாவளி தாக்கி ஸ்பானிஷ் கப்பற்படை சிதைந்தது.ஸ்பெயினை கொலம்பஸின் 'பணம் மற்றும் உடமைகளை இருந்த கப்பல் மட்டுமே அடைந்தது, அவரது முன்னாள் எதிரிகள் (ஒரு சில நண்பர்கள்) அனைவரது கப்பல்களும் மூழ்கி இருந்தது.

வெளியணைப்புகள் & மேற்கோள்கள்

தொகு