ராவுல் காஸ்ட்ரோ

ராவுல் மொடெஸ்டோ காஸ்ட்ரோ ருஸ் (Raúl Modesto Castro Ruz, பிறப்பு: ஜூன் 3, 1931) கியூபாவின் அரசுத் தலைவர் ஆவார்[1][2]. முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான இவர், கியூபா பொதுவுடமைக் கட்சியின் நடுக் குழுவின் இரண்டாம் செயலாளராகவும், முப்படைகளின் தளபதியாகவும் உள்ளார்.

ராவுல் காஸ்ட்ரோ
Raúl Castro
கியூபாவின் 23வது அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
பெப்ரவரி 24, 2008
பதில்: ஜூலை 31, 2006-பெப்ரவரி 24, 2008
துணை குடியரசுத் தலைவர் முதல் உப அதிபர்:
ஜொசே வென்டூரா
மற்றைய உப அதிபர்கள்:
ஜுவான் போஸ்க்
ஜூலியோ ரெகுவெய்ரோ
எஸ்டெபன் லாசோ
கார்லொஸ் டாவில்லா
அபெலார்டோ கொலொமே
முன்னவர் பிடல் காஸ்ட்ரோ
உப அதிபர்
பதவியில்
டிசம்பர் 2, 1976 – பெப்ரவரி 24, 2008
பின்வந்தவர் ஜோசே வென்டூரா
அணிசேரா நாடுகளின் செயலர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
பெப்ரவரி 24, 2008
முன்னவர் பிடல் காஸ்ட்ரோ
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 3, 1931 (1931-06-03) (அகவை 92)
பிரான், கியூபா
அரசியல் கட்சி கியூபாவின் பொதுவுடமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வில்மா எஸ்பின் (1959 – 2007)

பிடல் காஸ்ட்ரோவின் சுகவீனத்தை அடுத்து ஜூலை 31, 2006 இல் ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் தற்காலிக அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ பெப்ரவரி 19, 2008 இல் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பெப்ரவரி 24, 2008 இல் ராவுல் முறைப்படி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][3].

வாழ்க்கை வரலாறு‍ தொகு

ராவுல் காஸ்ட்ரோ கியூப புரட்சியின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர் ஆவார். புரட்சியின் போதும் அதற்கு‍ அடுத்தும் தொடர்ந்து‍ கியூபா நாட்டின் வளர்ச்சி மற்றும் அரசின் தலைமைப் பொறுப்புகளை வகித்து‍ வருகிறார்.[சான்று தேவை]

கைகுலுக்கிய ஒபாமா தொகு

1961ம் ஆண்டுமுதல் தங்களின் அரசாங்க உறவுகளை முறித்துக்கொண்ட கியூபாவும், அமெரிக்காவும் இதுவரை பரம எதிரிகளாகவே இருந்துவருகின்றன. 10.12.2013 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முன்னால் தென்னாப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் தாமாக முன்வந்து கைகுலுக்கினார்.[4]

மூலம் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவுல்_காஸ்ட்ரோ&oldid=3226887" இருந்து மீள்விக்கப்பட்டது