ஜே. கே. ரௌலிங்

ஆங்கில நாவல் எழுத்தாளர்( ஹாரி பாட்டர் தொடர்கள் ), திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்

ஜே. கே. ரௌலிங் (J. K. Rowling, பிறப்பு: 31 சூலை 1965) ஒரு ஆங்கில புதின எழுத்தாளர். ஜே.கே.ரவுலிங்கின் தந்தை பீட்டர் ஜேம்ஸ் ரவுலிங் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுாிந்து வந்தார். அவருடைய தாய் ஆனி ரவுலிங், அறிவியல் தொழில்நுட்ப வல்லுநராக இங்கிலாந்தில் பணிபுரிந்து வந்தார்.[1]

ஜே. கே. ரௌலிங்
J. K. Rowling
பிறப்புஜொவான் ரவுலிங்
31 சூலை 1965 (1965-07-31) (அகவை 58)
யேட், இங்கிலாந்து
தொழில்புதின எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்
தேசியம்பிரித்தானியர்
கல்விஎக்செட்டர் பல்கலைக்கழகம், (1986, இளங்கலை)
காலம்1997–இன்று
வகைகற்பனை, நாடகம், இளையோர் புதினம், குற்றப்புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆரி பாட்டர் தொடர்கள்
கையொப்பம்
இணையதளம்
jkrowling.com

குழந்தைப்பருவம் தொகு

 
ஜே.கெ.ராவ்லிங்க்

ரவுலிங் 23 மாதக் குழந்தையாக இருக்கும் போது அவளுடைய தங்கை டயானே பிறந்தாள். ரவுலிங் நான்கு வயது சிறுமியாக இருக்கும் போது அவருடைய குடும்பம் வின்டர்பான் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தது. அவர் புனித மைக்கேல் ஆரம்பப்பள்ளியில் பயின்றார். அந்தப்பள்ளியானது அடிமை ஒழிப்புப் போராளியான வில்லியம் வில்பர் போர்ஸ் மற்றும் கல்வி மறுமலர்ச்சியாளர் கன்னாமோர் ஆகியோரால் துவங்கப்பட்டது. ரவுலி்ங் பின்னாளில் எழுதிய "ஹாாிபாட்டர்" என்ற புத்தகத்தில் வரும் தலைமை ஆசிாியர் கதா பாத்திரம் ஆல்பஸ் தம்பில்டோர் அவருடைய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பிரட் டன் என்பவரே மேற்கூறிய கதாபாத்திரத்தை உருவாக்க அகத்தூண்டலை ஏற்படுத்தினார்.

சிறு வயதில் ரவுலிங் அடிக்கடி கற்பனைக் கதைகள் எழுதுவார். அவற்றை அடிக்கடி தன் தங்கையிடம் வாசித்துக் காண்பிப்பார். அவர் தன் இடைநிலைக் கல்வியை வைடீன் பள்ளியில் பயின்றார். அவருடைய தாய் அவர் படித்த கல்லூரியிலேயே அறிவியல் துறையில் பணியாற்றினார். செசிகா மிட்ஃபோர்டின் சுயசாிதமான "கான்ஸ் மற்றும் ரிபெல்ஸ் " என்ற புத்தகத்தை படித்த பிறகு செசிகா ரவுலிங்கின் கதாநாயகியாகவே ஆகிவிட்டார். அதன்பிறகு ரவுலிங் செசிகாவின் அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்தார்.

ரவுலிங்கின் இளமைப்பருவம் மிகவும் மகிழ்ச்சியற்றதாக இருந்தது. ஏனென்றால் அவரது தாய் நாேய்வாய்பட்டிருந்தார். அவருடைய தந்தையுடனும் பேசாமல் இருந்தார். அவர் தன் 11-ஆம் வயதில் கெர்மியோன் கிராங்கர் என்ற கதாபாத்திரத்தை தான் ஒத்திருப்பதாக கூறினார். ஸ்டீவ் எடி என்பவர் ரவுலிங்கிற்கு ஆங்கிலம் கற்பித்தார். ரவுலிங் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் முதல்நிலையில் தேர்ச்சி அடைந்தார்.

படிப்பு தொகு

1982 ஆம் ஆண்டு, ரவுலிங் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு நுழைவுத் தேர்வு எழுதினார். ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. பிறகு எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் பண்டைய பிரெஞ்சு இலக்கியம் படித்தார். 1986-ல் பட்டப் படிப்பை முடித்து 1988-ல் லண்டன் சென்று ஆய்வில் ஈடுபட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. Rowling, J.K. (16 February 2007). "The Not Especially Fascinating Life So Far of J.K. Rowling" பரணிடப்பட்டது 30 ஏப்பிரல் 2008 at the வந்தவழி இயந்திரம். Accio Quote (accio-quote.org). Retrieved 28 April 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._கே._ரௌலிங்&oldid=3459618" இலிருந்து மீள்விக்கப்பட்டது