ஐமன் அழ்-ழவாகிரி
ஐமன் முகம்மது ரபீ அழ்-ழவாகிரி (Ayman Muhammad Rabaie al-Zawahiri[6]; 19 சூன் 1951 – 31 சூலை 2022)[7] என்பவர் எகிப்தில் பிறந்த மருத்துவரும், இறையியலாளரும், 2011 முதல் 2022 சூலையில் இறக்கும் வரை அல் காயிதா தீவிரவாதக் குழுவின் தலைவராகவும் இருந்தவர்.[8] இவர் எகிப்திய இசுலாம் (ஜிகாத்) போராட்டத்தின் தலைவர் அப்த்-அல்-சுமர் எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் அமீராக இருந்தார். உசாமா பின் லாதின் நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பின்னர் அல்கைதாவின் தலைவரானார். இவர் முன்னதாக ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவில் தாக்குதல்களை நடத்திய இசுலாமியத் தீவிரவாத இயக்கங்களின் மூத்த உறுப்பினராக இருந்தார். 2012 இல், இவர் முசுலிம் நாடுகளில் உள்ள மேற்குலகத்தவரைக் கடத்துமாறு முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டவர்.[9]
ஐமன் அழ்-ழவாகிரி Ayman al-Zawahiri | |
---|---|
أيمن الظواهري | |
ஐமன் அழ்-ழவாகிரி காபுலில், நவம்பர் 2001 | |
அல் காயிதாவின் 2-வது தளபதி அமீர் | |
பதவியில் சூன் 16, 2011[1] – சூலை 31, 2022 | |
முன்னையவர் | உசாமா பின் லாதின் |
துணை அமீர், அல் காயிதா | |
பதவியில் 1988–2011 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | நாசிர் அழ்-வுகைசி |
அமீர், எகிப்திய இசுலாமியப் போராட்டம் | |
பதவியில் 1991–1998 | |
முன்னையவர் | முகம்மது அப்தல் சலாம் பராச் |
பின்னவர் | அல் காயிதாவுடன் இணைப்பு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஐமன் முகம்மது ராபி அழ்-ழவாகிரி சூன் 19, 1951 கீசா, Egypt |
இறப்பு | சூலை 31, 2022 காபுல், ஆப்கானித்தான்[2] | (அகவை 71)
காரணம் of death | ஆளில்லா வானூர்தித் தாக்குதல்[2] |
தேசியம் | எகிப்தியர் |
துணைவர்(கள்) | அசா அகமது (தி. 1978; இற. 2001) உமைமா அசன் |
பிள்ளைகள் | 7 |
முன்னாள் கல்லூரி | கெய்ரோ பல்கலைக்கழகம் |
வேலை | அறுவை மருத்துவர் |
இராணுவப் பணி | |
சார்பு | எகிப்து இராணுவம் (Surgeon)[3] (1974–1977)[4] எகிப்திய இசுலாமியப் போராட்டம் (1980–1998)[5] அல் காயிதா (1988–2022) |
சேவைக்காலம் | 1980–2022 |
தரம் | செனரல் அமீர். அல் காயிதா |
போர்கள்/யுத்தங்கள் | சோவியத்–ஆப்கான் போர் ஆப்கானித்தான் போர் (2001–2021) |
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் பின்னர், இவரைக் கைது செய்யத் தகவல் தருவோருக்கு 25 மில்லிய அமெரிக்க டாலர்கள் வெகுமதி அளிப்பதாக அமெரிக்க அரசுத் திணைக்களம் அறிவித்திருந்தது.[10][11] 1999 இல், இவர் மீது ஐக்கிய நாடுகளின் அல்-கைதா தடைகள் குழு உலகளாவிய தடைகளை விதித்திருந்தது.[12]
அல் ழவாகிரி அறுவை மருத்துவ நிபுணராக அறியப்படுகிறார்; அவரது எகிப்திய இசுலாமிய ஜிகாத் பின் லாதினின் அல்காயிதாவுடன் இணைந்தபோது பின் லாதினுக்குத் தனிப்பட்ட அறிவுரையாளராகவும் மருத்துவராகவும் செயற்பட்டு வந்தார். பின் லாதினை 1986ஆம் ஆண்டு ஜித்தாவில் சந்தித்தார்.[13] அல் ழவாகிரி இசுலாமிய மெய்யியல் மற்றும் இசுலாமிய வரலாற்றில் தேர்ந்த அறிவும் ஆழ்ந்த புரிதலும் கொண்டிருந்தார். அல் ழவாகிரிக்கு அரபி , ஆங்கிலம் [14][15] மற்றும் பிரெஞ்சு மொழியில் நல்ல தேர்ச்சி உண்டு.
1998ஆம் ஆண்டு அல் சவாகிரி எகிப்திய இசுலாமிய ஜிகாத் இயக்கத்தை அல்காயிதாவுடன் முறையாக இணைத்தார். அல்காயிதாவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, அல் ழவாகிரி அல்காயிதாவின் நிறுவன காலத்திலிருந்தே பணி புரிந்தவர் என்றும் அதன் ஆலோசனை அவையின் மூத்த உறுப்பினராக விளங்கினார் என்றும் அறியப்படுகிறது. பின் லாதினின் "தளபதி" என்று இவர் குறிப்பிடப்பட்டாலும், பின் லாதினின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் இவரை அல்காயிதாவின் உண்மையான "அறிவுத்திறன்" எனக் குறிக்கிறார்.[16]
2022 சூலை 31 அன்று, அழ்-ழவாகிரி அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றின் மூலம் காபுல் நகரில் வைத்துக் கொல்லப்பட்டார்.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Al-Qaeda's remaining leaders". BBC News. June 16, 2015 இம் மூலத்தில் இருந்து July 4, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170704215903/http://www.bbc.com/news/world-south-asia-11489337.
- ↑ 2.0 2.1 "Ayman al-Zawahiri: Al-Qaeda leader killed in US drone strike", BBC
- ↑ "Ayman al-Zawahiri – from medical doctor to al Qaeda chief", DW
- ↑ F. Schmitz, Winfried (2016). Solutions Looking Beyond Evil. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1524540395.
- ↑ "Ayman al Zawahiri". Archived from the original on March 31, 2019. பார்க்கப்பட்ட நாள் September 8, 2014.
- ↑ சில வேளைகளில் அழ்-தவாஹிரி என்றும் அழைக்கப்படுகிறார். எகிப்திய அரபு பலுக்கல்: Egyptian Arabic pronunciation: [ˈʔæjmæn mæˈħæmmæd ɾɑˈbiːʕ ez.zˤɑˈwɑhɾi]; அண்ணளவாக: ஐமன் முகம்மது ரபீ எழவாஹிரி.
- ↑ "Ayman al-Zawahiri". FBI Most Wanted Terrorists. Archived from the original on October 24, 2016. பார்க்கப்பட்ட நாள் July 28, 2016.
- ↑ Alexander Ward. "U.S. kills Al-Qaeda leader Ayman al-Zawahri in drone strike: Sources". Politico (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 1, 2022.
- ↑ "Al Qaeda leader calls for kidnapping of Westerners – CNN.com". CNN. October 29, 2012 இம் மூலத்தில் இருந்து December 25, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131225170834/http://edition.cnn.com/2012/10/27/world/asia/al-qaeda-kidnap-threat/.
- ↑ "CNN Programs – People in the News". Archived from the original on October 6, 2014. பார்க்கப்பட்ட நாள் April 28, 2017.
- ↑ "Ayman al-Zawahiri". Rewards for Justice. Archived from the original on October 21, 2019. பார்க்கப்பட்ட நாள் July 31, 2021.
- ↑ "UN list of affiliates of al-Qaeda and the Taliban". Archived from the original on July 28, 2006.
- ↑ Atkins, Stephen E. (31 May 2011). The 9/11 Encyclopedia. ABC-CLIO. pp. 456–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781598849219. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
- ↑ www.memri.org. "Al-Qaeda Deputy Head Ayman Al-Zawahiri in Audio Recording: Musharraf Accepted Israel's Existence". Memri.org. பார்க்கப்பட்ட நாள் 2011-02-03.
- ↑ Wilkinson, Isambard (August 11, 2008). "Al-Qa'eda chief Ayman Zawahiri attacks Pakistan's Pervez Musharraf in video". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/news/worldnews/asia/pakistan/2540522/Al-Qaeda-chief-Ayman-Zawahiri-attacks-Pakistans-Pervez-Musharraf-in-video.html. பார்த்த நாள்: April 26, 2010.
- ↑ Baldauf, Scott (31 October 2001). "The 'cave man' and Al Qaeda". Christian Science Monitor. பார்க்கப்பட்ட நாள் 2008-04-17.
- ↑ "US kills al Qaeda leader Ayman al-Zawahiri in drone strike in Afghanistan". CNN. 2 August 2022.
வெளியிணைப்புகள்
தொகு- New Yorker story about al-Zawahiri, by Lawrence Wright
- Fatwa from World Islamic Front for Jihad against Jews and Crusaders – Statement with bin Laden, 23 February 1998
- Al-Zawahiri: US faces Afghan, Iraq defeat (Aljazeera, 9 September 2004)
- Excerpts and video footage released December 1, 2005 from the September 2005 interview
- CNN's report on the January 2006 al-Zarqawi video tape
- Letter from al-Zawahiri to al-Zarqawi, copy at GlobalSecurity.org
- Extracts from Knights Under the Prophet's Banner பரணிடப்பட்டது 2007-01-28 at the வந்தவழி இயந்திரம்
- Responses to some of the Online Q&A பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம்