நகக்ஷதங்கள் (திரைப்படம்)
நகக்ஷதங்கள் (Nakhakshathangal) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித்திரைப்படம் ஆகும். இதன் கதை, மற்றும் திரைக்கதை உருவாக்கியவர் எம். டி. வாசுதேவன் நாயர் ஆவார். இப்படத்தின் இயக்குனர் ஹரிஹரன் ஆவார். இப்படத்தில் நடித்தற்காக நடிகை மோனிஷாவுக்கு சிறந்த இளம் நடிகைக்கான விருது கிடைத்தது.[1][2]
நகக்ஷதங்கள் | |
---|---|
இயக்கம் | அரிகரன் |
கதை | எம். டி. வாசுதேவன் நாயர் |
திரைக்கதை | எம். டி. வாசுதேவன் நாயர் |
நடிப்பு | மோனிசா உன்னி வினீத் பி. ஜெயச்சந்திரன் |
ஒளிப்பதிவு | ஷாஜி என். கருண் |
வெளியீடு | ஏப்ரல் 11, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
கதை
தொகுகுருவாயூர் கோவிலில் தன் மாமாவுடன் (திலகன்) பிரார்த்தனைக்காக வரும் 16 வயது பையனுக்கு (வினீத்) வயதான முதலாளியம்மாவின் துணைக்கு வந்திருக்கும் பெண்ணுடன் (மோனிஷா உண்ணி) அறிமுகம் கிடைக்கிறது. தன் மாமா கொடுக்கும் துன்பம் தாங்காமல் நம்பூதிரியின் (பி. ஜெயச்சந்திரன்) துணையுடன் அப்பெண்ணின் ஊருக்கே சென்று கல்லூரியில் படிக்கிறான். பின்னர் நம்பூதிரி இவனைமட்டும் விட்டுவிட்டு சென்றுவிட அப்பெண்ணின் முதலாளியின் வீட்டில் வேலைசெய்து கொண்டே படிக்கிறான். பல வேலைகளில் சாதூரியமாக நடந்துகொள்வதுகண்டு அந்த வீட்டு முதலாளியே படிக்கவைத்து தன் காது கேட்காத, பேசமுடியாத பெண்ணுக்கு (சலீமா) இவனைக் கேட்காமலே திருமணம் நிச்சயிக்கிறார். ஆனால் அவன் வேலைசெய்யும் பெண்ணின் மேல் காதல் கொண்டுள்ளான் என்று தெரிந்து திட்டுகிறார். முதலாளியின் மகள் வேலைக்காரப் பெண்ணுக்காக விட்டுக்கொடுக்கிறாள். அதே நேரத்தில் வேலைக்காரப்பெண் முதலாளி மகளுக்காக விட்டுக்கொடுக்கிறாள். ஆனால் கடேசியில் சோகத்தில் முடிகிறது.[3] இது ஒரு முக்கோணக்காதல் கதையாகும்.
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Nakhakshathangal". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
- ↑ "Nakhakshathangal". spicyonion.com. Archived from the original on 22 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2014.
- ↑ "IMDB". Nakhashathangal.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://malayalasangeetham.info/s.php?7852