தேசிய நெடுஞ்சாலை 79 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 79 (NH 79) என்பது இந்தியாவின் முழுக்க முழுக்க தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த நெடுஞ்சாலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை மற்றும் சேலத்திற்கு இடையே மொத்தம் 134 km (83 mi) தூரமுடையதாக உள்ளது.[2] இது சேலத்தில் தே. நெ. 44 மற்றும் தே. நெ. 544ஐ இணைக்கிறது. தே. நெ. 79 உளுந்தூர்பேட்டையில் தே. நெ. 68 மற்றும் மா. நெ. 69 மற்றும் கள்ளக்குறிச்சியில் மா. நெ. 6ஐயும் இணைக்கிறது. இது ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு மற்றும் மைடாஸ் நிறுவனத்தால் கட்டமைத்து நிர்வகித்து பரிமாறுதல் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக இரட்டைப் பாதை சாலையாக மேம்படுத்தப்பட்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 79
79

தேசிய நெடுஞ்சாலை 79
Map
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:134.2 km (83.4 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:சேலம் தமிழ்நாடு
கிழக்கு முடிவு:உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி - சின்னசேலம் - ஆத்தூர் - பெத்தநாயக்கன்பாளையம் - வாழப்பாடி - சேலம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 78 தே.நெ. 80

போக்குவரத்து

தொகு

தே. நெ. 79 கோயம்புத்தூர் மற்றும் கொச்சி ஆகிய இரு முக்கிய நகரங்களிலிருந்து பயணிக்கும் வாகனங்களுக்கான முக்கியமான இணைப்புச் சாலையாகும். தே. நெ. 79 சேலத்தை நேரடியாகச் சென்னையுடன் இணைக்கிறது. மேலும் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள நகரங்களுக்கும் சேவையினை வழங்குகிறது.

வழித்தடம்

தொகு

உளுந்தூர்பேட்டை - எலவனாசூர் கோட்டை - தியாகதுர்கம் - கள்ளக்குறிச்சி - சின்னசேலம், தலைவாசல் - காட்டுக்கோட்டை - ஆத்தூர் - பெத்தநாயக்கன்பாளையம் - வாழப்பாடி - சேலம்.[3]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 44 சேலம் அருகில் முனையம்[1]
தே.நெ. 179ஏ சேலம் அருகில்
  தே.நெ. 136 ஆத்தூர் அருகில்
  தே.நெ. 532 சின்னசேலம் அருகில்
  தே.நெ. 38 உளுந்தூர்பேட்டை அருகில் முனையம்[1]

படங்கள்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். பார்க்கப்பட்ட நாள் 13 April 2019.
  2. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.
  3. "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா) India. பார்க்கப்பட்ட நாள் 13 April 2019.

வெளி இணைப்புகள்

தொகு