பெத்தநாயக்கன்பாளையம்
பெத்தநாயக்கன்பாளையம் (Pethanaickenpalayam), சுருக்கமாக பெ.நா.பாளையம் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கு நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. பெத்தநாயக்கன்பாளையத்தில் பாயும் வசிஷ்ட ஆறு, முன்பு வேளாண்மைக்கு பயன்பட்டது. தற்போது ஆண்டின் மழைக்காலத்தில் மட்டுமே, சில நாட்கள் ஆற்றுநீர் குறைவாக ஓடும்.இங்கு சிறப்பு வாய்ந்த, புகழ்பெற்ற கொப்புக் கொண்ட பெருமாள் கோயில் உள்ளது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருடாந்திரம் புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில், இக்கோயிலுக்கு சென்று வழிபடுவர். இக்கோயில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக, மலையில் படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெத்தநாயக்கன்பாளையம் | |
---|---|
பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 11°39′52″N 78°29′56″E / 11.66444°N 78.49889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 33,678 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | www.townpanchayat.in/p-n-palayam |
அமைவிடம்
தொகுபெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு 45 கிமீ தொலைவில் சேலம் உள்ளது. இதன் கிழக்கில் ஆத்தூர் 12 கிமீ; மேற்கில் வாழப்பாடி 13 கிமீ; வடக்கில் ஏத்தாப்பூர் 7 கிமீ; தெற்கில் தம்மம்பட்டி 35 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு12.90 கிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,611 வீடுகளும், 17,678 மக்கள்தொகையும், கொண்டது.[2]