கோமுகி அணை
கோமுகி அணை (Gomukhi dam) தமிழ்நாடு மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டம் கச்சிராபாளையம் என்னும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஓர் அணையாகும்.[1]
வரலாறுதொகு
கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, கோமுகி அணை. காமராஜர் முதல்வராக இருந்த 1963 ஆம் ஆண்டில் இந்த அணை கட்டும் பணி தொடங்கி, பக்தவத்சலம் முதல்வராக இருந்த பொழுது நவம்பர் 23, 1965ஆம் ஆண்டில் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது. கல்வராயன் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. 360 ஹெக்டேர் நீர்ப்பரப்பு கொண்ட இந்த அணை மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2,024.29 ஹெக்டர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்காக அணையில் இருந்து 8,917 மீட்டர் தூரத்துக்கு கால்வாய் செல்கிறது. கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும். [2]
சிறப்புகள்தொகு
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை மீதமர்ந்து நேரு சவாரி செய்யும் சிலை, குறள் எழுதும் திருவள்ளுவர் சிலை, சிவபெருமான் சிலை, காளை மாடு, உழைப்பாளி சிலைகள், கண்கவர் விளக்குகள், காட்சி மேடைகள் இருக்கின்றது. அருகில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. கல்வராயன் மலைக்கு சுற்றுலா செல்பவர்கள் கோமுகி அணையையும் ரசித்துவிட்டு செல்லலாம். கல்வராயன்மலையில் உள்ள பெரியார் அருவி, மேகம் அருவி, வெள்ளி அருவிகளை காண்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் கோமுகி அணைக்கும் வந்து செல்கின்றனர்.[3]
மேற்கோள்கள்தொகு
- ↑ A.V. RAGUNATHAN. "Gomukhi dam hopeful of bountiful monsoon". The Hindu. 17 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "India: National Register of Large Dams 2009" (PDF). Central Water Commission. 21 ஜூலை 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 22 November 2011 பக்கம் 194 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ "கோமுகி அணை பூங்காவில் புத்துயிர் பெறும் சிலைகள்". தினமலர் நவம்பர் 10, 2014
வெளியிணைப்புகள்தொகு
- பொலிவு பெறுமா கோமுகி அணை?, தினமணி, திசம்பர் 23, 2013.