திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Tiruvannamalai Regional Transport Office - RTO) இந்திய நாட்டில், தமிழ் நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதாகும். தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.
திருவண்ணாமலை
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திரு அண்ணாமலையார் கோவில் நகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
வட்டாரப் போக்குவரத்து தலைமையிடம் | திருவண்ணாமலை |
துணை மாவட்டம் | திருவண்ணாமலை |
அடங்கியுள்ள வட்டங்கள் | 1.திருவண்ணாமலை 2.கீழ்பெண்ணாத்தூர் 3.செங்கம் 4.தண்டராம்பட்டு |
அரசு | |
• வகை | வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் |
• நிர்வாகம் | திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் |
• மக்களவை உறுப்பினர் | சி.என்.அண்ணதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | எ.வ.வேலு |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 13.64 km2 (5.27 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN 25 |
அமைவிடம்
தொகுதிருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது இந்த திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகும். இதன் வாகனப் பதிவு குறியீடு [TN 25] ஆகும். இதன் கீழ் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய தாலுகாக்கள் அமைந்துள்ளது.
மோட்டார் வாகன சட்டம்
தொகுவட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office, RTO) இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் பிரிவு 213 (1)இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால் நிருவகிக்கப்படும் அலுவலகம் ஆகும். இந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை செயற்படுத்துவது இதன் பொறுப்பாகும்.இது மாநில அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகின்றது. இந்தியாவில் பதிவு இலக்கத்தகடுகளையும் ஓட்டுனர் உரிமங்களையும் வழங்குகிறது.
இந்த அலுவலகத்தின் முதன்மை நோக்கங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளவை:-
- குடிமக்களுக்கு அனைத்து சேவைகளையும் திறனுடன் வழங்குதல்;
- வண்டிகள் மீதான அனைத்து வரிகளையும் கட்டணங்களையும் எவ்விதக் கசிவுமின்றி வசூலித்து அரசின் வருமானத்தைப் பெருக்குதல்;
- சாலைப் பாதுகாப்பை கூட்டுதல் மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குதல்;
- வண்டிகளாலான மாசுபடிதலைக் குறைத்தல்.
சான்றுகள்
தொகு- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.