கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர் (ஆங்கிலம்:Kilpennathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் வட்டம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். கீழ்பென்னாத்தூர் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கீழ்பென்னாத்தூர்
KILPENNATHUR திருவண்ணாமலை புறநகர் பகுதி | |
---|---|
முதல் நிலை பேரூராட்சி | |
அடைபெயர்(கள்): திருவண்ணாமலை புறநகர் பகுதி | |
ஆள்கூறுகள்: 12°15′01″N 79°13′32″E / 12.2502272°N 79.2256532°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | திருவண்ணாமலை |
சட்டமன்றத் தொகுதி | கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | முதல் நிலை பேரூராட்சி |
• நிர்வாகம் | கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | திருவண்ணாமலை |
• மக்களவை உறுப்பினர் | திரு.சி.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. கு.பிச்சாண்டி |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
• பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,718 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 604 601 |
வாகனப் பதிவு | TN 25 |
ஊராட்சி ஒன்றியம் | கீழ்பென்னாத்தூர் |
சென்னையிலிருந்து தொலைவு | 176 கி.மீ. |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 18 கி.மீ. |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 88 கி.மீ. |
வேட்டவலத்திலிருந்து தொலைவு | 23 கிமீ |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 61 கி.மீ. |
பெங்களூரிலிருந்து தொலைவு | 221 கி.மீ. |
திண்டிவனத்திலிருந்து தொலைவு | 50 கி.மீ. |
இணையதளம் | கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி |
அமைவிடம்
தொகுஇந்த நகரம் பெங்களூரு - திருவண்ணாமலை - புதுச்சேரி செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 16 கி.மீ. உள்ள கீழ்பெண்ணாத்தூர் அருகே அமைந்த தொடருந்து நிலையம் திருவண்ணாமலை ஆகும். இதன் கிழக்கில் செஞ்சி 18 கி.மீ.; வடக்கில் வேட்டவலம் 23 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு12.44 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 69 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [2]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3152 வீடுகளும், 13,718 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4100 மற்றும் 93 ஆகவுள்ளனர். [3]
நிர்வாகம் மற்றும் அரசியல்
தொகுபேரூராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்றத் தொகுதி | கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் | திரு.கு.பிச்சாண்டி |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | திரு.சி.என்.அண்ணாதுரை |
கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி, கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
- ↑ கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kilpennathur Population Census 2011