துரிஞ்சிகுப்பம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறந்த கிராம ஊராட்சி

துரிஞ்சிகுப்பம் (Thurinjikuppam Village), தமிழ்நாட்டின் , திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட போளுர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

துரிஞ்சிகுப்பம்
Thurinjikuppam
ஊராட்சி
அடைபெயர்(கள்): விவசாய கிராமம், ஜவ்வாது மலையின் தொடக்கம்
துரிஞ்சிகுப்பம் is located in தமிழ் நாடு
துரிஞ்சிகுப்பம்
துரிஞ்சிகுப்பம்
துரிஞ்சிகுப்பம் is located in இந்தியா
துரிஞ்சிகுப்பம்
துரிஞ்சிகுப்பம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 12°36′32″N 79°07′21″E / 12.6087837°N 79.1225444°E / 12.6087837; 79.1225444ஆள்கூறுகள்: 12°36′32″N 79°07′21″E / 12.6087837°N 79.1225444°E / 12.6087837; 79.1225444
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்ஆரணி
சட்டமன்றத் தொகுதிபோளூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
நிர்மாணித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைஊராட்சி
 • Bodyதுரிஞ்சிகுப்பம் ஊராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு. எம்.கே.விஷ்ணுபிரசாத் (இந்திய தேசிய காங்கிரசு)
 • சட்டமன்ற உறுப்பினர்திரு. சேகரன் (திமுக)
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
 • ஊராட்சி மன்றத் தலைவர்திருமதி.ஆர்த்தி பாஸ்கரன்
பரப்பளவு[1]
 • மொத்தம்12
பரப்பளவு தரவரிசை211 மீட்டர்கள்
ஏற்றம்7.2
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,993
 • அடர்த்தி250
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு606907
வாகனப் பதிவுTN 97
ஊராட்சி ஒன்றியம்போளூர்
சென்னையிலிருந்து தொலைவு165 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு50 கி.மீ
வேலூரிலிருந்து தொலைவு42 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு22 கிமீ
போளூரிலிருந்து தொலைவு14 கிமீ
சேத்துப்பட்டிலிருந்து தொலைவு39 கிமீ
கண்ணமங்கலத்திலிருந்து தொலைவு22 கிமீ
இணையதளம்துரிஞ்சிகுப்பம் ஊராட்சி

நிர்வாகம்தொகு

இந்த கிராமம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்டதாகும் . துரிஞ்சிகுப்பம் ஊராட்சியின் நிர்வாக தலைமையிடம் இங்கு அமைந்துள்ளது. மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது [[1]]. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 9 வார்டுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அவை:-

 • பிள்ளையார் கோயில் தெரு
 • தண்டபாணி கோயில் தெரு
 • குசால் பேட்டை மற்றும் கங்கையம்மன் கோயில் தெரு
 • வீரக்கோயில் தெரு
 • சித்தேரி
 • பெரியேரி
 • கம்மனந்தல்
 • விளக்கனந்தல்
 • கொல்லைமேடு

அமைவிடம்தொகு

துரிஞ்சிகுப்பம் கிராமம், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில், சவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே ஆரணி நகரம் 22 கி.மீ தொலைவிலும், தெற்கே போளூர் 14 கி.மீ தொலைவிலும், மற்றும் வடக்கே கண்ணமங்கலம் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகைதொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2993 ஆகும். இவர்களில் பெண்கள் 1343 பேரும் ஆண்கள் 1404 பேரும் உள்ளனர். 2993 மக்கள்தொகை கொண்ட துரிஞ்சிகுப்பம் கிராமம், போளூர் வட்டத்தில் 36 வது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும், இது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. துரிஞ்சிகுப்பம் கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 7 கிமீ 2 ஆகும், இது துணை மாவட்டத்தின் பரப்பளவில் 26 வது பெரிய கிராமமாகும். கிராமத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிமீ 2 க்கு 417 நபர்கள். இந்த ஊராட்சி, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள்தொகு

துரிஞ்சிகுப்பம் கிராமத்திலிருந்து சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து தடம் எண் புறப்படும் இடம் சேருமிடம் வந்து சேரும் நேரம் புறப்படும் நேரம் வழித்தடங்கள்
P2 (LSS) துரிஞ்சிகுப்பம் போளூர் மற்றும் அவலூர்பேட்டை 4:30AM கட்டிப்பூண்டி,பொத்தரை, பாடகம்,தேவிகாபுரம்
6A (LSS) சித்தேரி மற்றும் துரிஞ்சிகுப்பம் ஆரணி 6:10AM 6:35AM கேளூர்,கேளூர் சந்தைமேடு, வடமாதிமங்கலம் ரயில் நிலையம், களம்பூர்
P2 (LSS) சித்தேரி மற்றும் துரிஞ்சிகுப்பம் போளூர் மற்றும் ஆரணி 9:15AM 10:00AM கட்டிப்பூண்டி,பொத்தரை,வடமாதிமங்கலம் ரயில் நிலையம், களம்பூர்
6A (LSS) துரிஞ்சிகுப்பம் ஆரணி 11:10AM 11:30AM கேளூர்,கேளூர் சந்தைமேடு, வடமாதிமங்கலம் ரயில் நிலையம், களம்பூர்
P2 (LSS) துரிஞ்சிகுப்பம் போளூர் மற்றும் அவலூர்பேட்டை 2:10AM 2:30AM கட்டிப்பூண்டி,பொத்தரை, பாடகம்,தேவிகாபுரம்
6A (LSS) துரிஞ்சிகுப்பம் ஆரணி 3:55PM 4:05AM கேளூர்,கேளூர் சந்தைமேடு, வடமாதிமங்கலம் ரயில் நிலையம், களம்பூர்
P2 (LSS) சித்தேரி மற்றும் துரிஞ்சிகுப்பம் போளூர் 7:15PM 7:30PM கட்டிப்பூண்டி,பொத்தரை,
6A (LSS) துரிஞ்சிகுப்பம் ஆரணி 8:50PM 9:05PM கேளூர்,கேளூர் சந்தைமேடு, வடமாதிமங்கலம் ரயில் நிலையம், களம்பூர்
P2 (LSS) துரிஞ்சிகுப்பம் (தங்குமிடம்) துரிஞ்சிகுப்பம் பேருந்து நிலையம் 10:15AM கட்டிப்பூண்டி,பொத்தரை, பாடகம்,தேவிகாபுரம்


 • இங்கிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் கூட்டு சாலை கேளூர் சந்தைமேடு எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த கூட்டு சாலைக்கு செல்ல 24 மணி நேரமும் ஆட்டோ வசதியும், குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வசதிகளும் உள்ளன. NH 234 உடன் இந்த கூட்டு சாலை இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சித்தூர் முதல் கடலூர் வரை (திருவண்ணாமலை - போளூர் - ஆரணி - வேலூர் சாலை) செல்லும் சாலை ஆகும்.

இதனையும் காண்கதொகு

சான்றுகள்தொகு

4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

 1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரிஞ்சிகுப்பம்&oldid=3010147" இருந்து மீள்விக்கப்பட்டது