துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோயில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில்


துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோயில் (Thurinjikuppam Adhi Parasakthi Amman Temple) திருவண்ணாமலை மாவட்டத்தில், துரிஞ்சிகுப்பம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் இருப்பது போல் இந்த ஊரிலும் ஆதிபராசக்தி அம்மன் அருள்பாலித்து வருகிறது.

அருள்மிகு ஆதிபராசக்தி கோவில்
ஆள்கூறுகள்:12°36′34″N 79°07′30″E / 12.6094561°N 79.1250466°E / 12.6094561; 79.1250466
பெயர்
வேறு பெயர்(கள்):ஓம் சக்தி அம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:துரிஞ்சிகுப்பம் போளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:போளூர்
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:ஆதிபராசக்தி
குளம்:1
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடிப்பூரம்
வரலாறு
கட்டிய நாள்:இருபதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மூலவர்

தொகு

இத்தளத்தின் மூலவர் ஆதிபராசக்தியாகும். ஆதிபராசத்தி இரு கரம் கொண்டும், தாமரை பீடத்தில் அமர்ந்தவாரும் காட்சியளிக்கிறார். இந்த மூலவர் சிலையை கணபதி ஸ்தபதி வடித்துள்ளார்.மேலும் இச்சிலைக்குக் கீழ்பகுதியில் சுயம்பு காணப்படுகிறது.

அமைப்புகள்

தொகு

இக்கோயிலுக்கு என ஆதிபராசக்தி சித்தர் பீட அமைப்புகள் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மூலம் இக்கோயிலின் வழிமுறைகளும், வழிபாட்டு முறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த அமைப்பினைச் சார்ந்தோர் சக்திமாலை அணிந்து, விரதமிருந்து செந்நிற ஆடையை உடுத்தி ஆதிபராசக்தியை வழிபடுகின்றனர். இந்த அமைப்பினைக் கொண்டு குழு வழிபாடும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

தல வரலாறு

தொகு
 
ஓம் சக்தி திரிசூலம்

Adhiparasakthi.jpg 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால் வேப்பமரம் வீழ்ந்தது என்றும் அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது.  தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது.

இப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். கருவறையின் வலப்புறத்தில்  தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அவ்வாறே அமைத்துக்கொண்டாள். பக்தர்களை காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் நான் நாகவடிவில் உறைகிறேன் எனக்கூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலர்க்கு காட்சி கொடுத்ததும் உண்டு. மேல்மருவத்தூரில் மட்டும் வணங்கி வந்தனர். அதன் பின்பு பங்காரு அடிகளாரின் ஆணைக்கினங்க திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சிகுப்பம் எனும் இடத்தில் ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் 2001 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு மேல்மருவத்தூரில் பூஜைகள் செய்வது போல் இந்த ஆலயத்திலும் செய்யப்பட்டு வணங்கப்படுகிறது.

விழாக்கள்

தொகு
  • ஆடிப்பூரம்
  • தைப்பூசம்
  • நவராத்திரி

குறிப்பாக வருடந்தோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு நாளில் அம்மனுக்கு தினத்தில் காலையில் 108 பால் குடம் எடுத்து ஊர்வலமாக சுற்றி வந்து திரளான பக்தர்கள் அம்மனுக்கு பாலபிசேகம் செய்வார்கள். மதிய நேரத்தில் அம்மனுக்கு முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், கார் இழுத்தல், தீச்சட்டி எடுத்தல், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையால் வடை எடுத்தல், மார்பு மீது உரல் கல் வைத்து உலக்கையால் இஞ்சி இடித்தல், காரை முல் மிதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறும் [[1]]. இந்த நிகழ்வுகளும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


சான்றுகள்

தொகு

1.[[2]] செய்தித்தாளில் வந்த செய்திகள்

2.[[3]] செய்தித்தாளில் வந்த செய்திகள்

3.[[தொடர்பிழந்த இணைப்பு]] செய்தித்தாளில் வந்த செய்திகள்

  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1, திருவண்ணாமலை மாவட்டம்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)