கண்ணமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி

கண்ணமங்கலம் (ஆங்கிலம்: Kannamangalam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள ஒரு முதல்நிலைப் பேரூராட்சி ஆகும். இது ஆரணி (சட்டமன்றத் தொகுதிக்கும்) மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

கண்ணமங்கலம்
KANNAMANGALAM
ஆரணி புறநகர் பகுதி
முதல் நிலை பேரூராட்சி
கண்ணமங்கலம் is located in தமிழ் நாடு
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் is located in இந்தியா
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°45′08″N 79°08′52″E / 12.7522°N 79.1478°E / 12.7522; 79.1478
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
சட்டமன்றத் தொகுதிஆரணி (சட்டமன்றத் தொகுதி)
அருகிலுள்ள இரயில் நிலையம்கண்ணமங்கலம் இரயில் நிலையம்
வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைமுதல் நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்கண்ணமங்கலம் முதல் நிலை பேரூராட்சி
 • மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.சேவூர் ராமச்சந்திரன்
 • மாவட்ட ஆட்சியர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.
பரப்பளவு
 • மொத்தம்4.8 km2 (1.9 sq mi)
ஏற்றம்
223.87 m (734.48 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்21,890
இனம்ஆரணிக்காரன்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீடு
632311
தொலைபேசி குறியீடு+914173******
வாகனப் பதிவுTN 97 ** xxxx
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
சென்னையிலிருந்து தொலைவு145 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு64கி.மீ
வேலூரிலிருந்து தொலைவு21 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு19 கிமீ
ஆற்காடிலிருந்து தொலைவு29 கிமீ
இணையதளம்கண்ணமங்கலம் முதல் நிலை பேரூராட்சி

அமைவிடம்

தொகு

திருவண்ணாமலையிலிருந்து 64 கிமீ தொலைவில் கண்ணமங்கலம் பேரூராட்சி அமைந்துள்ளது. இதன் கிழக்கே ஆரணி 19 கிமீ; மேற்கே ஜமுனாமரத்தூர் 50 கிமீ; வடக்கே வேலூர் 21 கிமீ மற்றும் ஆற்காடு 29 கி.மீ தொலைவிலும், தெற்கே போளூர் 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - ‌‌‌‌‌‌‌சித்தூர் மாநில நெடுஞ்சாலை, மங்களூரு - வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கண்ணமங்கலம் - ஆரணி மாநில நெடுஞ்சாலை மற்றும் கண்ணமங்கலம் - ஆற்காடு மாநில நெடுஞ்சாலை இணையும் இடத்தில் அமைந்துள்ள அழகிய நகரமாகும்.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

4.80 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆரணி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[2]


சுற்றுலா

தொகு
  • கோட்டை மலை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில்
  • சுப்பிரமணிய சுவாமி கோயில், படவேடு

நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு

இந்நகரம் தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. கண்ணமங்கலம் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த நகரை கண்ணமங்கலம் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.

பேரூராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி ஆரணி (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் திரு.சேவூர்.இராமச்சந்திரன்
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்

போக்குவரத்து

தொகு

சாலை வசதிகள்

தொகு

பேருந்து வசதிகள்

தொகு

கடலூர், விழுப்புரம், செய்யாறு, சேத்துப்பட்டு, செஞ்சி, மேல்மலையனூர், வந்தவாசி, செங்கம், காஞ்சிபுரம், திண்டிவனம், சாத்தனுர் அணை, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சித்தூர், பேர்ணாம்பட்டு, மரக்காணம், உத்திரமேரூர், பெரணமல்லூர், மேல்மருவத்தூர், திருக்கோவிலூர் மற்றும் அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரப்பேருந்து வசதிகளும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,696 வீடுகளும், 21,890 பேராக மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு வீதம் 83.68% அகும். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1038 பெண்கள் வீதம் ஆக அமைகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. "கண்ணமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-13. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
  3. Kannamangalam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணமங்கலம்&oldid=4093049" இலிருந்து மீள்விக்கப்பட்டது