கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் (ஆங்கிலம்:Kalasapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமாக அமைந்துள்ளது. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும் கலசப்பாக்கம் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கலசப்பாக்கம்
KALASAPAKKAM | |
---|---|
ஊராட்சி | |
ஆள்கூறுகள்: 12°26′N 79°04′E / 12.43°N 79.07°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | ஆரணி |
சட்டமன்றத் தொகுதி | கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | ஊராட்சி |
• நிர்வாகம் | கலசப்பாக்கம் ஊராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | சி.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | பெ.சு.தி.சரவணன் |
• மாவட்ட ஆட்சியர் | கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 134 km2 (52 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 9.0 மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 31,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 606 751 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 91 4181 |
வாகனப் பதிவு | TN 97 & TN 25 |
ஊராட்சி ஒன்றியம் | கலசப்பாக்கம் |
சென்னையிலிருந்து தொலைவு | 178 கி.மீ. |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 26 கி.மீ. |
போளூரிலிருந்து தொலைவு | 10 கி.மீ. |
ஆரணியிலிருந்து தொலைவு | 35 கி.மீ. |
செங்கத்திலிருந்து தொலைவு | 43 கி.மீ. |
வேலூரிலிருந்து தொலைவு | 58 கி.மீ. |
பெங்களூரிலிருந்து தொலைவு | 213 கி.மீ. |
இணையதளம் | கலசப்பாக்கம் ஊராட்சி |
அமைவிடம்
தொகுகலசப்பாக்கம் நகரம் கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் - தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடக்கே போளூர் 10 கி.மீ. தொலைவிலும், ஆரணி 35 கி.மீ. தொலைவிலும் மற்றும் வேலூர் 58 கி.மீ. தொலைவிலும், தெற்கில் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலை 26 கி.மீ. தொலைவிலும், மேற்கே செங்கம் 43 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.
மக்கள் தொகை
தொகு2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி கலசபாக்கம்-பூண்டி வருவாய் நகரில் 31,000 மக்கள் வாழ்கிறார்கள் .
சாலை வசதிகள்
தொகுகலசப்பாக்கம் நகரில் சாலை வசதிகள் உள்ளது.
- மாநில நெடுஞ்சாலை - கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் சாலை
- மாநில நெடுஞ்சாலை - விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் - மங்களூரு சாலை
- மாநில நெடுஞ்சாலை - திருவண்ணாமலை - ஆரணி - காஞ்சிபுரம் சாலை
- மாவட்ட சாலை - கலசப்பாக்கம் - கடலாடி - புதுப்பாளையம் சாலை
ஆகிய கலசப்பாக்கம் நகரின் வழியாக நகரத்தை இணைக்கிறது.
போக்குவரத்து வசதிகள்
தொகுவேலூர், ஆரணி, போளூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. துரிஞ்சிகுப்பம், அவலூர்பேட்டை, பாடகம், மங்கலம், ஆதமங்கலம்புதூர், பர்வதமலை, மன்சுராபாத் ஊர்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சிறப்பு
தொகுகலசப்பாக்கம் வட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
நிர்வாகம் மற்றும் அரசியல்
தொகுஇந்நகரம் சிறப்பு நிலை ஊராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. கலசப்பாக்கம் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை ஊராட்சியாகும். இந்த நகரை கலசப்பாக்கம் ஊராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
ஊராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்றத் தொகுதி | கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் | திரு.பெ.சு.தி.சரவணன் |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | திரு.சி.என்.அண்ணாதுரை |
அரசியல்
தொகு- கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்றாகும். இது 1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் கலசப்பாக்கம் தொகுதி ஒன்றாகும். கலசப்பாக்கம் ஊராட்சியானது, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
- 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த திரு.பெ.சு.தி.சரவணன் வென்றார்.
வருவாய் வட்டம்
தொகுதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் கலசப்பாக்கம் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தை போளூர் வட்டத்தின் சிலப் பகுதிகளை கொண்டு 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் 52 வருவாய் கிராமங்களும், 1,40,301 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் கலசப்பாக்கம் ஊராட்சி மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.