மேல்மலையனூர்

மேல்மலையனூர் என்பது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு வட்டம் ஆகும். இந்த வட்டத்திலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில் இருக்கும் புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை அன்றும், மாசி மாதத்திலும் சிறப்புப் பூசைகள் நடத்தப் பெறுகின்றன. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் இங்கு விசேட நாட்களாகக் கருதப்படுவதால் அத்தினங்களில் இங்கு பக்தர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.  [4][5]சென்னையிலிருந்து செல்பவர்கள்

மேல் மலையனூர்
—  வட்டம்  —
மேல் மலையனூர்
இருப்பிடம்: மேல் மலையனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°24′N 79°24′E / 12.40°N 79.40°E / 12.40; 79.40
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

1)காஞ்சிபுரம்-வந்தவாசி-சேத்துப்பட்டு-வளத்தி /அவலூர்பேட்டை -மேல்மலையனூர்

2)காஞ்சிபுரம்-செய்யாறு-பெரணமல்லூர்-சேத்துப்பட்டு-வளத்தி /அவலூர்பேட்டை -மேல்மலையனூர்

3)தாம்பரம் -உத்திரமேரூர் -வந்தவாசி-சேத்துப்பட்டு-வளத்தி /அவலூர்பேட்டை -மேல்மலையனூர் வழியாக செல்லலாம்.  

போக்குவரத்து

தொகு

மேல்மலையனூருக்கு வேலூரிலிருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் நேரடியாக பேருந்துகள் முக்கியமான நாளன்று செல்கின்றன. இதனால் எல்லா மாவட்டத்திலிருந்தும் மேல்மலையனூருக்கு எளிதாகச் சென்று வரலாம். இங்கிருந்து அரைமணி நேரத்தில் செஞ்சிக் கோட்டைக்கும் செல்லலாம். இங்கிருந்து ஆரணிக்கு ஒரு மணி நேரத்தில் வளத்தி வழியாக செல்லலாம். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 40 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-13. பார்க்கப்பட்ட நாள் 2012-08-09.
  5. http://tamilnadutourism.org/Tamil/viluppuram.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்மலையனூர்&oldid=3867457" இலிருந்து மீள்விக்கப்பட்டது