பூந்தமல்லி
பூந்தமல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேர்வு நிலை நகராட்சியாகும். இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு. பூந்தமல்லி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
பூவிருந்தவல்லி பூந்தமல்லி | |||
— தேர்வு நிலை நகராட்சி — | |||
ஆள்கூறு | 13°02′50″N 80°05′40″E / 13.047300°N 80.094500°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவள்ளூர் | ||
வட்டம் | பூந்தமல்லி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] | ||
சட்டமன்றத் தொகுதி | பூந்தமல்லி | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
மக்கள் தொகை | 6,59,922 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 47 மீட்டர்கள் (154 அடி) | ||
குறியீடுகள்
|
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியது. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Poonamallee". Falling Rain Genomics, Inc. Retrieved 20 அக்டோபர் 2006.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved 20 அக்டோபர் 2006.
மேலும் பார்க்க
தொகு- பூந்தமல்லி நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-07-26 at the வந்தவழி இயந்திரம்