ஆரணி ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம்

ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம் (ஆங்கிலம்:Sri Vembuliyamman Temple) தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகரில் ஆரணி கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு புனிதத் தலமாகும்.

ஆரணி ஸ்ரீவேம்புலியம்மன் திருக்கோயில்
ஆரணி ஸ்ரீவேம்புலியம்மன் திருக்கோயில் is located in இந்தியா
ஆரணி ஸ்ரீவேம்புலியம்மன் திருக்கோயில்
ஆரணி ஸ்ரீவேம்புலியம்மன் திருக்கோயில்
Location within Tamil Nadu
ஆள்கூறுகள்:12°40′19″N 79°16′49″E / 12.6719449°N 79.2803659°E / 12.6719449; 79.2803659
பெயர்
பெயர்:அருள்மிகு ஸ்ரீவேம்புலியம்மன் திருக்கோயில்
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு:வேம்புலியம்மன்
தமிழ்:ஸ்ரீவேம்புலியம்மன் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை மாவட்டம்
அமைவு:ஆரணி
கோயில் தகவல்கள்
மூலவர்:வேம்புலியம்மன் (தேவி)
சிறப்பு திருவிழாக்கள்:ஆடி வெள்ளி, ஆடித்திருவிழா, புஷ்ப பல்லக்கு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோவில்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1973
அமைத்தவர்:பக்தர்கள்

தல வரலாறு

தொகு

ஆரணி கோட்டை மைதானத்தில் காவலர் விடுதி அருகே வேப்பமரத்தடியில் திரிசூலம் ஏந்தி பல வருடங்களாக வழிப்பட்டு வந்தனர் என வரலாறு உண்டு. ஆரணி நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த கோவிந்தசாமி என்பவர் திரிசூலம் உள்ள இடத்தில் பீடம் அமைக்கலாம் என ஆலோசனை கூறினார். ஆரணி நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். இதன்பிறகு கோவிந்தசாமி யின் கனவில் தோன்றி இக்கோவிலுக்கு வேம்புலியம்மன் என பெயரிடுங்கள் என அருள்வாக்கு கூறியதாக கூறினார்.[1]

இதன் காரணமாக வேம்புலியம்மன் பெயரிடப்பட்டு 1973 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 1974 ஆண்டு வினாயகர் நவகிரக சிலைகள் அமைக்கப்பட்டது. கோயிலை கட்டி 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கோயிலை சீரமைத்து 1985 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

சிறப்புகள்

தொகு

ஆரணி வேம்புலியம்மன் கோயில் வருடாந்தோறும் ஆடிமாதம் என்றாலே ஆரணி நகரம் முழுவதும் கலைக்கட்டத் தொடங்கி விடும்.

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு அடுத்தப்படியாக நகரம் முழுவதும் மக்கள் கூட்டத்துடன் நடைபெறும் திருவிழா ஆரணி வேம்புலியம்மன் திருவிழா ஆகும்.
  • ஆடிமாதம் வெள்ளிக்கிழமை கமண்டலநாகநதி ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வேம்புலியம்மன் கோயிலுக்கு வருவார்கள்.
  • வேம்புலியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறும்.
  • பின்னர் இரவு 7மணிக்கு பம்பை, ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம், தவில் இசைக்கச்சேரி, சென்னை மேளம் ஆகியவை முழங்க வேம்புலியம்மன் ஆரணி நகரம் முழுவதும் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வரும்.

மேற்கோள்கள்

தொகு
  1. ஆரணி வேம்புலியம்மன் ஆலயம் தல வரலாறு