கமண்டல நாகநதி ஆறு

கமண்டல நாகநதி ஆறு திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஒரு பருவ கால துணை ஆறு ஆகும். இது ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி நகரின் வழியாக சென்று ஆரணி அருகே உள்ள வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு ஆரணி தாலுகா மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. [2]

கமண்டல நாகநதி ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வாழைப்பந்தல், ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் at
12°37′40″N 79°22′46″E / 12.6277254°N 79.3794155°E / 12.6277254; 79.3794155
 ⁃ உயர ஏற்றம்
980 அடிகள் (300 m)
நீளம்100 கிலோமீட்டர்கள் (62 mi)
ஜவ்வாது மலையின் காட்சி

ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள் ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள செண்பகத் தோப்பு அணையிலிருந்து உருவாகும் நாக நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் ஆறும் ஆரணி அருகே இணைந்து கமண்டல நாக நதியாகி வாழைப்பந்தல் அருகில் இணைகிறது.

நீர்த்தேக்க அமைவிடம் தொகு

ஆரணி அருகே உள்ள படவேடு எனுமிடத்தில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் செண்பகத் தோப்பு அணை அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும்.

ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர்கள் தொகு

படவேடு நகரம், சந்தவாசல், வெள்ளூர், ஒண்ணுபுரம், கண்ணமங்கலம் நகரம், நீப்பளாம்பட்டு, அரசம்பட்டு, காமக்கூர், ஆரணி புறநகர், ஆரணி நகரம், சத்திய விஜய நகரம், லாடப்பாடி, மாமண்டூர், முணுகப்பட்டு, வாழைப்பந்தல் ஆகிய ஊர்களின் வழியாக இந்த ஆறு பாய்ந்து செய்யாற்றில் கலக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Integrated Hydrological Data Book". India. pp. 76 இம் மூலத்தில் இருந்து 20 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140520215958/http://www.cwc.nic.in/main/downloads/Combined%20Final_HDD_09042012.pdf. பார்த்த நாள்: 25 March 2014. 
  2. [தொடர்பிழந்த இணைப்பு] கமண்டல நாகநதி ஆறு]

1.[[1]] தமிழ் நாடு ஆறுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமண்டல_நாகநதி_ஆறு&oldid=3547881" இருந்து மீள்விக்கப்பட்டது