நகரி
நகரி (Nagari) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இம்மாநிலம் 676 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சித்தூர் வருவாய் கோட்டத்திலுள்ள 66 மண்டலங்களுள் நகரி மண்டலத்தின் தலைமையிடம் நகரி நகரமாகும்.[1][2]. இந்த தாலுகா தான் ஆந்திரப் பிரதேசத்தின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தாலுகாவாகும்
புவியியல்
தொகுநகரி நகரம் 13.33 ° வடக்கு 79.58 ° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 116 மீட்டர் அல்லது 380 அடி உயரத்தில் இந்நகரம் உள்ளது. மேலும் இது ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாம் வகுப்பு நகராட்சியாகும். 25.6 சதுர கி.மீ பரப்பளவில் நகரி நகரம் பரவியுள்ளது. நகரி நகரம் திருப்பதி முதல் சென்னை வரை செல்லும் நெடுஞ்சாலையில் திருப்பதியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் சென்னை நகரத்திலிருந்து 95 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பருத்தி நெசவு புடவைகள், லுங்கிகள் ஆடை பொருட்கள், தேசம்மா கோயில், கரியமானிக்யம் வெங்கடேசுவர சுவாமி கோயில், சாய் பாபா கோயில் மற்றும் வாழைப்பழங்களுக்கு இந்நகரம் பிரபலமானது ஆகும்.
அமைவிடம்
தொகுநகரி நகரம் தலைநகரில் இருந்து 444 கி.மீ. தொலைவிலும் மாவட்ட தலைமையகத்திலிருந்து 67 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 2005-ஆம் ஆண்டிலிருந்து 3-ஆம் வகுப்பு நகராட்சியாக நிறுவப்பட்டது. இந்த நகராட்சியில் 4 மண்டலங்களும் 27 தேர்தல் வார்டுகளும் உள்ளன.
தட்பவெப்பம்
தொகுநகரி நகரம் பொதுவாக வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும், கோடை காலம் மார்ச் முதல் சூன் வரை நீடிக்கும். ஆண்டு மழை அளவு 1.62 மி.மீ ஆகும். இதில் பெரும்பாலானவை அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையிலிருந்து பெறப்பட்டன.
தட்பவெப்ப நிலைத் தகவல், நகரி , இந்தியா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.9 (85.8) |
32.8 (91) |
36.7 (98.1) |
40.3 (104.5) |
43.3 (109.9) |
40.8 (105.4) |
35.7 (96.3) |
34.8 (94.6) |
34.8 (94.6) |
32.7 (90.9) |
30.1 (86.2) |
28.9 (84) |
35.07 (95.12) |
தாழ் சராசரி °C (°F) | 18.7 (65.7) |
20.1 (68.2) |
22.6 (72.7) |
26.2 (79.2) |
27.9 (82.2) |
27.2 (81) |
25.9 (78.6) |
25.5 (77.9) |
25.1 (77.2) |
23.5 (74.3) |
21.7 (71.1) |
19.9 (67.8) |
23.69 (74.65) |
பொழிவு mm (inches) | 22.0 (0.866) |
19.7 (0.776) |
2.9 (0.114) |
13.9 (0.547) |
45.7 (1.799) |
69.7 (2.744) |
113.0 (4.449) |
118.6 (4.669) |
119.1 (4.689) |
157.5 (6.201) |
218.7 (8.61) |
130.5 (5.138) |
1,031.3 (40.602) |
ஆதாரம்: Indian Meteorological Department[3] |
மக்கள் தொகை
தொகு2001 ஆம் ஆண்டில் 56832 ஆக இருந்த நகரத்தின் மக்கள் தொகை 2011 ல் 62275 ஆக அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இது 8.74% ஆக அதிகரித்துள்ளது. நகரி நகரத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 985 பெண்கள். கல்வியறிவு விகிதம் 77.85%. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகரி நகரத்தின் மக்கள் தொகை 96,152 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 48,058 ஆண்கள் மற்றும் 48,094 பெண்கள் அடங்குவர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1000 பெண்கள் ஆக இருந்தது. இது தேசிய பாலின விகித சராசரியான 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்பதை விட அதிகமாகும். 10,518 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 5,471 சிறுவர்கள் மற்றும் 5,047 சிறுமிகள் - இது 1000 சிறுவர்களுக்கு 922 சிறுமிகள் என்ற பாலின விகிதமாகும். மக்கள் தொகையில் 62,640 பேர் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர். நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 65.14% ஆக உள்ளது, இது தேசிய சராசரியான 73.00% ஐ விட குறைவாகும். தெலுங்கு மொழி இந்த ஊரில் அதிகாரப்பூர்வமாகவும் பரவலாகவும் பேசப்படும் மொழியாகும்.
கல்வி
தொகுதமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி துறையின் மூலம் இங்கு தொடக்கக் கல்வி, உயர் நிலைக்கல்வி, மேல் நிலைக்கல்வி படிப்புகள் தமிழக அரசால் நடத்தப்படுகின்றன.[5][6]
ஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 45. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நகரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[7]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.
- அடவிகொத்தூர்
- குண்டராஜுகுப்பம்
- காக்கவீடு
- திருமலராஜுகண்டுரிகா
- மாங்காடு
- வெலவடி
- அகரம்
- டி.வி புரம்
- தாமரபாக்கம்
- சிறீரங்கநாகர அக்கிரகாரம்
- நகரி
- சால்வபட்டெடா
- சத்ரவாடா
- மிட்டபாலம்
- தேரணி
- ஏகாம்பரகுப்பம்
- கீழப்பட்டு
- நாகராஜகுப்பம்
- ஓராந்தங்கள் கொல்லகுப்பம்
- காவேட்டிபுரம்
- கன்னிகாபுரம்
- வீரகாவேரிராஜுபுரம்
- நேத்தம் கண்டுரிகா
- மேலப்பட்டு
- முதிபள்ளி
- சீனிவாசபுரம்
- வெங்கடநரசிம்மராஜுபேட்டை
- சரஸ்வதிவிலாசபுரம்
- தடுக்கு
சான்றுகள்
தொகு- ↑ "Chittoor District Mandals" (PDF). Census of India. pp. 482, 516. பார்க்கப்பட்ட நாள் 19 June 2015.
- ↑ "District Census Handbook - Chittoor" (PDF). Census of India. pp. 22–23. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
- ↑ "Climatological Data of Important Cities" (PDF). Indian Meteorological Department. Archived from the original (PDF) on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2012-03-27.
- ↑ "Table C-16 Population by Mother Tongue: Andhra Pradesh".
- ↑ "School Education Department" (PDF). School Education Department, Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 7 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
- ↑ "The Department of School Education - Official AP State Government Portal | AP State Portal". www.ap.gov.in. Archived from the original on 7 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
- ↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்