திருமலை சமணர் கோயில் வளாகம்
திருமலை சமணர் கோயில் வளாகம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின், ஆரணி அருகே திருமலை எனும் குன்றில் அமைந்த திகம்பர சமண வளாகம் ஆகும். இவ்வளாகம் வேலூரிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது.[1] பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இச்சமண வளாகம், மூன்று சமணக் குடைவரைகளும், இரண்டு சமணக் கோயில்களும் கொண்டது. பொ.ஊ. 12ம் நூற்றாண்டில், இச்சமணக் கோயிலில் தீர்த்தங்கரரான நேமிநாதரின் 16 அடி உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
திருமலை சமணர் கோயில் வளாகம் | |
---|---|
திருமலை சமணர் கோயில் குன்று | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | திருமலை கிராமம், ஆரணி திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு |
புவியியல் ஆள்கூறுகள் | 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E |
சமயம் | சமணம் |
பொ.ஊ. 16ம் நூற்றாண்டில் இவ்வளாகத்தில் மகாவீரர் கோயில் நிறுவப்பட்டுள்ளது.
பொ.ஊ. 15–17 நூற்றாண்டுகளில் இச்சமண வளாகத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அவைகளில் சில தற்போதும் உள்ளது.
ஆரணியிலிருந்து போளூர் செல்லும் திருவண்ணாமலைச் சாலையில் இச்சமணக் கோயில் வளாகம் உள்ளது.
படக்காட்சிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Shri Khstra Arihantgiri Digambar Jain Mandir". Archived from the original on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-01.
- ↑ Singh, Nagendra Kumar (2001). Encyclopedia of Jainism. Anmol Publications Pvt. Ltd. p. 1000.
உசாத்துணை
தொகு- Pal, Susant (2014), Imbibed in Faith, Partridge Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781482812596