செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்
செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]
செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°18′41″N 78°47′23″E / 12.3114°N 78.7898°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
அமைவிடம்: | செங்கம் |
சட்டமன்றத் தொகுதி: | செங்கம் |
மக்களவைத் தொகுதி: | திருவண்ணாமலை |
ஏற்றம்: | 296.95 m (974 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | ரிஷபேசுவரர் |
தாயார்: | அனுபாம்பிகை |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கல்வெட்டுகள்: | உள்ளன |
அமைவிடம்
தொகுதிருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கம் என்னும் ஊரில் இக்கோயில் உள்ளது. இவ்வூர், கல்வெட்டில் தென்கண்ணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் ரிஷபேஸ்வரர் ஆவார். இறைவி அனுபாம்பிகை ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுஉள் திருச்சுற்றில் விநாயகர், மகாலட்சுமி, நவக்கிரகம், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]
சிறப்பு
தொகுஇக்கோயிலில் ஆண்டுக்கொரு முறை பங்குனி 3ஆம் தேதி மாலையில் சூரிய ஒளி கோயில் கோபுரத்தில் விழுந்து சிறிது நேரத்தில் நந்தி மீது விழும். அப்போது சில நிமிடங்கள் நந்தி பொன் நிறத்தில் மின்னுவதைக் காணமுடியும். இதைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். [2]
பராமரிப்பு
தொகுஇக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3]