இளையான்குடி

இளை பெருநகரம்


இளையாங்குடி (ஆங்கிலம்:Ilayangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும்.

இளையான்குடி
—  பேரூராட்சி  —
இளையான்குடி
இருப்பிடம்: இளையான்குடி

, தமிழ்நாடு

அமைவிடம் 9°38′N 78°38′E / 9.63°N 78.63°E / 9.63; 78.63
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி இளையான்குடி
மக்கள் தொகை 24,774 (2011)
பாலின விகிதம் 1:1.082 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


42.6 மீட்டர்கள் (140 அடி)

குறியீடுகள்

மாவட்ட தலைநகரமான சிவகங்கையிலிருந்து வட மேற்கே 37 கிலோமீட்டரிலும், மானாமதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தென் கிழக்கேயும் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் விமான தளம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடியில் அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 5,947 வீடுகளும், 24,774 மக்கள்தொகையும் கொண்டது. [1]இது 21.64 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 144 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

இப்பேரூராட்சி 63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் வாழ்ந்த ஊராகும். இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7-ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது.[3]

சிறப்பு

தொகு

இளையான்குடி, 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது.

மேலோட்டம்

தொகு

இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக பிரிந்துள்ளனர். அவை 1. நெசவுக்காரர்கள் (நேசவுபட்டடை) - ஜவுளி தொழில் புரிந்தவர்கள்
2. எருதுக்காரர்கள் (மேலபட்டடை) - போக்குவரத்து புரிந்தவர்கள்
3. கொடிக்கால்காரர்கள் (சாலை ஹனபி பட்டடை) - வெற்றிலை விவசாயம் செய்தவர்கள்
4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை நேசவுப்பட்டடையினர் என்றும் அழைக்கப்பட்டனர்

இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளன.

ஆதாரங்கள்

தொகு
  1. Ilayangudi Population Census 2011
  2. பேரூராட்சியின் இணையதளம்
  3. http://en.wikipedia.org/wiki/Ilaiyangudi
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையான்குடி&oldid=3704348" இலிருந்து மீள்விக்கப்பட்டது