காயல்பட்டினம்

இது தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும்
(காயல்பட்டிணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காயல்பட்டினம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

காயல்பட்டினம்
காயல்
காயல்பட்டினம்
இருப்பிடம்: காயல்பட்டினம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°34′N 78°07′E / 8.57°N 78.12°E / 8.57; 78.12
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் திருச்செந்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
நகர்மன்ற தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

40,588 (2011)

3,247/km2 (8,410/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

12.5 சதுர கிலோமீட்டர்கள் (4.8 sq mi)

6 மீட்டர்கள் (20 அடி)

குறியீடுகள்

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 8°34′N 78°07′E / 8.57°N 78.12°E / 8.57; 78.12 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது. பண்டை கால இலக்கியங்கள் & கல்வெட்டுகளில் வகுதை, பவுத்திர மாணிக்கப் பட்டனம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய காயல்பட்டினம் ஆகும். இவ்வூர் திருச்செந்தூர் எனும் ஊருக்கு 8 கி.மீ. தெற்கிலும், தூத்துக்குடிக்கு 32 கி.மீ. தொலைவிலும் கடலோரமாக அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரவல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,417 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,588 ஆகும். அதில் 19,492 ஆண்களும், 21,096 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 92.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,082 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4995 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,991 மற்றும் 3 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 26.34% , இசுலாமியர்கள் 67.24%, கிறித்தவர்கள் 6.36% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.[5]

பழமை தொகு

இந்நகர் தோன்றி ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது என்று இந்நகரில் கிடைக்கப்பெற்ற தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாண்டியர் ஆட்சி காலத்தில், மதுரை அதன் தலைநகரமாகவும், காயல்பட்டினம் அதன் துறைமுகமாகவும் திகழ்ந்தது என்று DISCOVERY OF INDIA எனும் நூலில் பண்டித ஜவகர்லால் நேரு கூறியுள்ளார்.

கலிபா உமர் காலத்தில் கி.பி. 642-ல் மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாத்தை பரப்ப ஒரு குழு கடல் வழியாக கேரளா வந்து சேர்ந்தது[6]. அதில் ஒரு பகுதியினர் காயல்பட்டினம் வந்து குடியேறி கடற்கரையோரமாக ஒரு பள்ளியைக் கட்டினர். தற்போது இப்பள்ளி கோசுமறை அருகே புதையுண்டுள்ளது. இதன் இமாம் செய்யிது அஹமது ஷஹிது இப்னு முஹம்மது கரீம் மதனி ஆவார். இக்குழுவினர் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் கடலேறி இப்பகுதி புதையுண்டுவிட்டது[7].

இரண்டாவது இசுலாமியர்களின் குடியேற்றம்: தொகு

கி.பி. 842ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கலீபா அல்வாதிக் ஆட்சி காலத்தில் கலிபா அபூபக்கர் வம்சாவழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி தலைமையில் ஒரு குழுவினர் எகிப்திய மன்னரின் புதிய கொள்கையை ஏற்க மறுத்து கடல் மார்க்கமாக ஜயவீர ராஜகாரு வேந்தர் காலத்தில் காயல்பட்டிணம் வந்து சேர்ந்தனர். இவர்கள் இந்நகரில் கி.பி.843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர்.[8]. காயல்பட்டணம் காட்டு மொகுதூம் என்பவர் அரபுநாட்டிலிருந்து இஸ்லாத்தைப் போதிக்க காயல்பட்டணம் வந்தார். இவர்களுக்கு அக்கால பாண்டிய மன்னன் கண்ணியப் படுத்தி நிலங்களை வழங்கியுள்ளார். ஹிஜ்ரி 571 ல் ஏர்வாடியில் அடங்கப்பட்டிருக்கும் இப்ராஹிம் என்பவருடன் காயல்பட்டணம் கீழ நெய்னார் தெருவில் அடங்கப்பட்டிருக்கும் கலீபா என்பவரும் & ஈக்கி அப்பா கலீபா என்பவரும் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டணம் வந்தனர். மன்னர் அதிவீரராம பாண்டியன் மகன் குலசேகரப் பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்குப் படைத் தளபதியாகவும், கலீபாவை நீதிபதியாகவும் நியமித்து, ஏர்வாடி இப்ராஹிமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.

மூன்றாவது குடியேற்றம்: தொகு

முகம்மது நபி அவர்களின் வம்சாவழியைச் சார்ந்த சுல்தான் ஜமாலுத்தீன் தலைமையில் கி.பி.1284ல் காயல்பட்டணத்திற்கு ஒரு குழு வந்து சேர்ந்தது. இவர்கள் ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினர். சுல்தான் ஜமாலுத்தீன் பரம்பரையினர், பிரபுக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஜும்ஆ பெரிய பள்ளியில் சுமார் 40,000 ற்கும் மேற்பட்ட இறைநேசர்கள் அடங்கியுள்ளனர். இவ்வூரில் முதன்முதலாக அமைக்கப்பட்ட தெருக்கள் நான்கு: நயினார் தெரு, சதுக்கைத் தெரு (பைக்காரத் தெரு), மஹ்தூம் தெரு & மரைக்காயர் தெரு ஆகியவை. பின்னர், ஊர் விரிவாக்கத்தின் போது பல தெருக்கள் உருவாகின. ஊரை அழகாக வடிவமைத்துள்ளனர். பெண்களுக்கென்று தனிப் பாதைகள் (முடுக்குகள்) அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் கூடுமிடத்திற்கு வெட்டை என்பார்கள். எகிப்து நாட்டின் சாலை அமைப்புகள், வீடு அமைப்பைப் போலவே இந்நகரில் வீடுகள், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இன்றும் எகிப்துக்குச் சென்றால் இதே அமைப்பை பார்க்கலாம்.

வீடு கட்டமைப்பு தொகு

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும், இனத்திலும், சமுதாயத்திலும் அவர்களுக்கென்று தனித் தனி கலாச்சாரம், அமைப்புகள் இருக்கின்றன. அதே போல் அவர்களின் கட்டிடங்களும் அவர்கள் வாழும் வீடுகளும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்தே அமைக்கப்படுகின்றன. காயல்பட்டணத்திற்கென்று தனியாக வீட்டின் அமைப்பு இருக்கின்றது. மிகப் பெரும்பான்மையான வீடுகள் இதே மாதிரியே கட்டப்படுகின்றன..

சாதாரணமாக வீடுகள் 20 அடி அகலம் 40 அடி நீளமும் உயரம் குறைந்தபட்சம் 10 அடி கொண்டதாகவே வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் ஜான்ஸ் என்னும் வரவேற்பறை, ஊட்டாங்கரை என்னும் படுக்கை அறை, திண்ணை என்னும் ஹால் அதன்பின் முற்றம் அதன் ஒரு பகுதியில் கழிவறை, குளியலறை மற்றும் மறுபக்கத்தில் அடுப்பாங்கரை என்னும் சமையலறை ஆகியவை அமைக்கப்படுகின்றன.ஆண்களுக்கு மாடிக்கு செல்ல ஏணிபடிகள் ஜான்ஸிலிருந்தும் பெண்களுக்கு திண்ணையிலிருந்து மாடிக்கு செல்ல ஏணிப் படிகள் தனியாக அமைக்கப்படுகின்றன. இரண்டு வீடுகளுக்கு அடுத்தாற்போல் முடுக்கு எனப்படும் ஓடை அமைக்கப்படுகிறது. அது குறைந்த பட்சம் 3 அடி கொண்டதாக இருக்கும். அதன்பிறகு அடுத்த வீடு இருக்கும். ரோட்டிலிருந்து உள்பக்கம் உள்ள வீட்டினர் வெளியே செல்வதற்கு பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முடுக்கில் அந்த முடுக்குக்கு பாத்தியப்பட்ட ஆண்களும், எல்லாப் பெண்களும் பாதையாக பயன்படுத்துவார்கள்.

வீட்டின் அமைப்பு கிழமேலாக இருந்தால் தென்பாகத்து முடுக்கிற்கு பாத்தியம் பெறுவார்கள்.

வடகிழக்காக இருப்பின் கிழக்குப் பக்கம் முடுக்குக்கு பாத்தியம் கொண்டாடுவார்கள். இந்த முடுக்கில் அவர்கள் கழிவறைக்கு காண் தொட்டி என்னும் கழிவறைத் தொட்டி அமைக்கவும் செய்வார்கள். மின்கம்பிகள் & குடிநீர் குழாய்கள் என்று தேவையான அனைத்தும் இந்த முடுக்கின் மூலமே எடுத்து செல்வார்கள்.

சிறப்புகள் தொகு

  • இப்பட்டினம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் புகழ்பெற்ற வணிகத்தளமாகவும் துறைமுகமாகவும் விளங்கியது.
  • காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வழுப்படுத்தும் விதமாக மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.[9] மேலும் இக்கல்வெட்டில் சோனகர் என்னும் அரேபிய வணிகக் குழுக்கள் பற்றிய குறிப்பும் உள.[10]
  • முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார்[11] என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.

மூலம் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Kayalpattinam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  5. காயல்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  6. பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயம்
  7. திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய“கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற நூல்
  8. மக்கள் உரிமை வாரஇதழ்– டிசம்பர், 23 – 29, 2005
  9. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/454
  10. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/455
  11. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/403

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயல்பட்டினம்&oldid=3712311" இலிருந்து மீள்விக்கப்பட்டது