கோத்தகிரி
கோத்தகிரி (ஆங்கிலம்:Kotagiri) என்பது கோயமுத்தூர் மாவட்டத்திற்கு மேற்கேயுள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து சரியாக 35 கி.மீ. தொலைவில் உள்ள மலைநகரம் ஆகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி வட்டம் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும் ஆகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்கு இணையாக அல்லது அதிகமாக வேளாண் நிலங்களும் அவற்றில் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, மேரைக்காய் போன்றவை பயிரிடப்பட்டும் வருகின்றது. மேலும், வருக்கி, தேயிலைத்தூள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நகரமாகவும் கோத்தகிரி விளங்குகிறது. கோத்தகிரி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கோத்தகிரி | |
அமைவிடம் | 11°26′N 76°53′E / 11.43°N 76.88°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 29,184 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1,950 மீட்டர்கள் (6,400 அடி) |
கோத்தகிரி பெயர்க்காரணம் :
தொகுகிரி = மலை; கோத்தர்கள் வசிக்கும் மலை என்பதால் கோத்தகிரி என வழங்கப்படுகிறது. கோத்தர்களின் தாயகப் பகுதி எனும் பொருளில் கோத்தகிரி என வழங்கப்படுகிறது.
கோத்தர்கள் என்போர் தோடர்களைப் போன்ற பழங்குடியின மக்கள் ஆவர். கோத்தர்கள் திருச்சிக்கடி என்ற ஊரிலும், நீலகிரியின் சிற்சில இடங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களே கோத்தகிரி மண்ணின் மைந்தர்கள் ஆவர். இதற்குச் சான்றாக கோத்தகிரி நேரு பூங்காவில் கோத்தர்களின் பழமையான ஐனோர் கோவில் விளங்குகிறது. நீலகிரியின் பூர்வக்குடிகளாக தோடர்கள்கோத்தர்கள், இருளர்கள் போன்ற மக்களே விளங்குகின்றனர். கன்னட, மலையாள, படுக,தெலுங்கு, தமிழ் மக்கள் போன்றோர் நீலகிரிக்குப் பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் புலம்பெயர்ந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்களே ஆவர். இப்பழங்குடியின் இடத்தில் இப்போது புலம்பெயர்ந்த மக்களாக உள்ளனர். வெள்ளையர்கள் வருகை நீலகிரிக்கு வரும் முன்பு பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் இப்பழங்குடி மக்களின் வாழ்வு இன்று நலிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமைவிடம்
தொகுமேற்கு தொடர்ச்சி மலையில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த கோத்தகிரி, மேட்டுப்பாளையத்திலிருந்து 32 கிமீ தொலைவிலும் உதகமண்டலத்திலிருந்து 26 கிமீ தொலைவிலும் குன்னூரிலிருந்து 20 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு30.93 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரவல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7860 வீடுகளும், 28207 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 11°26′N 76°53′E / 11.43°N 76.88°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1990 மீட்டர் (5882 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அருகில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள்
தொகு- கொடநாடு காட்சி முனை
- கேத்தரின் அருவி
- சல்லிவன் நினைவகம்
- உயிலட்டி நீர்வீழ்ச்சி (கூக்கல்துறை நீர்வீழ்ச்சி)
- லாங்வுட் சோலைக்காடுகள் (பாதுகாக்கப் பட்ட சூழியல் மேம்பாட்டு வனப்பகுதி)
இதனையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/kotagiri/population
- ↑ Kotagiri Population Census 2011
- ↑ Kotagiri Town Panchayat
- ↑ "Kotagiri". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)