மோகனூர் (ஆங்கிலம்:Mohanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார். மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் முகவனூர் என்றழைக்கப்பட்டது. பின்னாளில் மோகனூர் என்று மருவி நின்று நிலை பெற்றது. கொங்கு மண்டலச் சதகத்துக்குள் இதற்கான பாடல்கள் ஆதாரமாக உள்ளன. மூவர் தேவாரத்தில் கொங்கு தென்குமரி என இந்த ஊர் காவிரிக்கரை சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோகனூர்
மோகனூர்
இருப்பிடம்: மோகனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E / 11.08; 78.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் மோகனூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

14,315 (2011)

4,772/km2 (12,359/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3 சதுர கிலோமீட்டர்கள் (1.2 sq mi)

143 மீட்டர்கள் (469 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/mohanur

அமைவிடம் தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E / 11.08; 78.17 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மோகனூர் பேரூராட்சிக்கு வடக்கில் நாமக்கல் 19 கிமீ தொலைவிலும்; கிழக்கில் காட்டுப்புத்தூர் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் உள்ள மோகனூர் காவிரிக் கரையோரம் அமைந்துள்ளது.

மோகனூரில் காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது, சேலம் - நாமக்கல் - கரூர் இருப்புப்பாதை இவ்வூர் வழியாகச் செல்கிறது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

3 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4][5]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,890 வீடுகளும், 14,315 மக்கள்தொகையும் கொண்டது. [6]

பள்ளிகள் தொகு

  1. அரசினர் ஆண்கள் மேனிலை பள்ளி
  2. அரசினர் பெண்கள் மேனிலை பள்ளி
  3. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிகுலேஷன் பள்ளி
  4. கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளி
  5. சரோஜினி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
  6. ராசி மெட்ரிகுலேஷன் பள்ளி

மற்றும் பஞ்ஜாயத்து துவக்கப்பள்ளிகளும் சில உள்ளன

மருத்துவமனைகள் தொகு

  1. கேஜே மருத்துவமனை
  2. தனராசா மருத்துவமனை
  3. மலர் மருத்துவமனை
  4. தங்கம் மருத்துவமனை
  5. காந்தமலை மருத்துவமனை
  6. குமரன் மருத்துவமனை
  7. சர்க்கரை ஆலை மருத்துவமனை
  8. பழனி (கருணாநிதி) மருத்துவமனை

திரையரங்குகள் தொகு

  1. பாலசுப்பிரமணியா
  2. அய்யனார் (இயங்காத நிலையில்)

இதனையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "Mohanur". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 
  4. Mohanur Town Panchayat
  5. மோகனூர் பேரூராட்சியின் இணையதளம்
  6. Mohanur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகனூர்&oldid=3594790" இருந்து மீள்விக்கப்பட்டது