திருவேற்காடு


திருவேற்காடு (ஆங்கிலம்:Tiruverkadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின், பூந்தமல்லி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இது வடமேற்கு சென்னையின் ஒரு முக்கியமான புறநகர் மற்றும் வளர்ந்துவரும் குடியிருப்புப் பகுதியாகும்.

திருவேற்காடு
—  சிறப்பு நிலை நகராட்சி  —
திருவேற்காடு
இருப்பிடம்: திருவேற்காடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°04′24″N 80°07′37″E / 13.073400°N 80.126900°E / 13.073400; 80.126900
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பூந்தமல்லி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]
நகர்மன்றத் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

62,824 (2011)

300/km2 (777/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

28.5 சதுர கிலோமீட்டர்கள் (11.0 sq mi)

42 மீட்டர்கள் (138 அடி)

மக்கள் வகைப்பாடு

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 19 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15,863 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 62,824 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7189 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,360 மற்றும் 235 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.95%, இசுலாமியர்கள் 1.4%, கிறித்தவர்கள் 5.13% , தமிழ்ச் சமணர்கள் .04%, மற்றும் பிறர் 0.47% ஆகவுள்ளனர்.[4]

திருத்தலங்கள்

தொகு

தேவாரப்பாடல் பெற்ற திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் மற்றும் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் ஆகியவை திருவேற்காட்டில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. நகர மக்கள்தொகை பரம்பல்

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவேற்காடு&oldid=4025117" இலிருந்து மீள்விக்கப்பட்டது