மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் (ஆங்கிலம்:Manachanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி மாநகரின் புறநகரும் , மண்ணச்சநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியாகும்.
மண்ணச்சநல்லூர் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | மணச்சநல்லூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 25,931 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அமைவிடம் தொகு
திருச்சி - துறையூர் செல்லும் சாலையில், திருச்சி மாநகராட்சி எல்லையில் இருந்து 12 கிமீ தொலைவில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு தொகு
18 வார்டுகள் கொண்ட மண்ணச்சநல்லூர் பேரூராட்சி மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல் தொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2021 வீடுகளும், 25,931 மக்கள்தொகையும் கொண்டது. [4]
கோயில்கள் தொகு
- மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோயில்
- திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் என்னும் ஊரில் அருள்மிகு பூமிநாதர் ஆலயம் உள்ளது.. திருமதி பாப்பம்மாள் இந்த கோவிலை 1860 ஆம் ஆண்டு கட்டினார்.அதற்காக 3000 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக அளித்து, திருவாவடுதுறை ஆதீனத்தை தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த கோவிலை நிர்வகிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி திருவாவடுதுறை ஆதீனம் மாத்திரம் திருமதி பாப்பம்மாள் சத்திரத்திற்கு முறையே பூஜைகள் பகிரப்படுகின்றன.இந்தப் பகுதியில் கோயில் இல்லை, மக்கள் வழிபட வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். அதனால் இந்த இடத்தில் கோயில் இல்லாததால் திருமதி பாப்பம்மாள் குடும்ப உறுப்பினர்களுக்காக இந்தக் கோயில் கட்டப்பட்டது.. அதனால்தான் அவர்கள் தர்மசவர்த்தினி (அறம் வளர்த்த நாயகி என்று பொருள்படும்) பூமிநாதர் என்று கடவுளுக்குத் தங்கள் சொந்தப் பெயர்களை வைத்தனர். இது பாடல் பெற்ற தலம் கிடையாது. இங்கு இருக்கும் வன்னி மற்றும் விலுவ மரம் ,சில வருடங்களுக்கு முன்பு தான் வைக்க பட்டது.. இந்த ஆலயம் கட்டிய நாள் முதல் மண் கட்டும் பூஜைகள் இல்லை.. மண் அரக்கன் என்று எந்த ஒரு அரக்கணும் இங்கு வாழவில்லை.. சிவ பெருமான் இங்கு வதம் செய்யவில்லை.. இவை அனைத்தும் இயற்றபட்ட கட்டு கதை.. திருமதி பாப்பாம்மாள் , திருவாடுதுறை ஆதீனத்திருக்கு எழுதி கொடுத்த கல்வெட்டு மற்றும் இந்த கோவில் கட்டுவதற்காக அடி கல் வைத்து பூஜை செய்யும் காட்சி ( வர்ணங்களால் வரையப்பட்டது ) இப்போதும் திருவாடுதுறை ஆதீனம் மற்றும் பாப்பம்மாள் சத்திரம் சார்பாக கட்டளை பூஜை செய்ய படுவதற்கான சாட்சி.
மேற்கோள்கள் தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ manachanallur-tamil-nadu.html Manachanallur Population Census 2011[தொடர்பிழந்த இணைப்பு]