திருவேங்கடம்

திருவேங்கடம் (Thiruvengadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சங்கரன்கோவில் வட்டத்தை பிரித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திருவேங்கடம் வட்டம் உருவாக்கப்பட்டது.

திருவேங்கடம் பேரூராட்சி
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் திருவேங்கடம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர் வெற்றிடம்
மக்கள் தொகை

அடர்த்தி

8,337 (2011)

534/km2 (1,383/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.60 சதுர கிலோமீட்டர்கள் (6.02 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thiruvengadam

அமைவிடம்

தொகு

இப்பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கிமீ தொலைவிலும்; சிவகாசியிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. சங்கரன்கோவில் இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

15.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆறுகள்

தொகு

திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள்

தொகு
  • யோக ஆஞ்சநேயர் திருக்கோவில்(சங்குபட்டி விலக்கு,நரிபாறை)
  • அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்)
  • மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்)
  • திருவேங்கடநாதர் கோவில்
  • படிக்காசு விநாயகர் கோவில்
  • காளியம்மன் கோவில்
  • முப்பிடாரி அம்மன் கோவில்
  • வனப்பேச்சியம்மன் கோவில
  • அய்யனார் கோவில்.

கல்வி நிலையங்கள்

தொகு
  • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
  • சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளி
  • அரசு மேல்நிலைப் பள்ளிகள் (தமிழ் & ஆங்கிலம் பயிற்று மொழிகள்)

தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)

தொகு
  • ஸ்ரீ கலைவாணி மெட்ரிகுலேசன் பள்ளி
  • கெங்குசாமி நாயுடு மெட்ரிகுலேசன் பள்ளி

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "திருவேங்கடம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-20.
  4. "திருவேங்கடம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-20.
  5. Thiruvenkadam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவேங்கடம்&oldid=4076377" இலிருந்து மீள்விக்கப்பட்டது