தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தமிழ்நாடு தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும்.
செண்பகப்பொழில் தென்காசி ஆன கதைதொகு
முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம்[1] செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[2]
கோவில்தொகு
கி.பி. 1445-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, கி.பி. 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன.
- நீளம்: கிழக்கு-மேற்கு -554 அடி
- அகலம்: தெற்கு-வடக்கு-318 அடி
கோபுர உயரம்: 180 அடி[3]
சிறப்புதொகு
ஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள்.
பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார்.
இந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும்.
விநாயகர் கோயில்கள்தொகு
- கன்னிசுதன் (கன்னிதிசை)
- சுந்தரகயத்தன் (மேல்திசை)
- ஷென்பகச்சேய் (வடமேற்கு)
- வெயிலிகந்தபிள்ளை (கன்னிமார்தெரு)
- அம்பலச்சேய் பொன்னம்பல விநாயகர் (கன்னிமார்தெரு வடகிழக்கு)
- ஒப்பனைச்சுதன் (கிழக்கு)
- அபிடேகச்சேய் (தென்கிழக்கு)
- மெய்கண்டப்பிள்ளை (தெற்கு சம்பாத்தெரு)
திருமடங்கள்தொகு
- அரசருக்கு முடிசூட்டும் சன்னதி மடம் (சிவந்தபாதவூருடைய ஆதீனம் சிவாகமங்கள் ஓத)
- சாமிதேவநயினார் (அகோர தேவர் ஆதீனம் சிவதீக்கை பெற்றுக்கொள்ள)
- துருவாசராதீனம் (வேம்பத்தூர் மடம் கல்வி கற்றுக்கொள்ள)
- பெளராணிக (ஆனந்தக்கூத்தர் ஆதீனம் புராணங்கள் கேட்க)
- தத்துவ (பிரகாசர் ஆதீனம் தத்துவ விசாரணை செய்ய)
- மெய்கண்டார் ஆதீனம் (சைவசித்தாந்த நூல்களை ஓதி உபதேசம் பெற)
- உமையொருபகக் குரு ஆதீனம் (உபதேசம் பெற)
- இடி வலஞ்சூழ் பரஞ்சோதித்தேவர் ஆதீனம் (யோகம் பயில)
திருப்பணிகள்தொகு
கி.பி.1524-ல் திருவாங்கூரைச் சேர்ந்த ஜெயதுங்க நாட்டு மன்னர் சங்கரநாராயண பூதல வீரமார்த்தாண்ட ராமவர்மன் என்ற சிறைவாய் மூத்தவரால் செப்பனிடப்பட்டு பிரம கலசாபிசேகம் நடத்தப்பட்டது.[4]
இராஜகோபுரம்தொகு
கி.பி.1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் முற்றுவிக்கப்பட்டது.
(பரக்கிரம பாண்டிய மன்னர் காலமான பின்பு அவரது தம்பி)
கோபுர அமைப்புதொகு
உயரம்: 175 அடி 9 நிலை
நீளம்: வடக்கு - தெற்கு -110 அடி
அகலம்: கிழக்கு-மேற்கு- 84 அடி
இக்கோபுரத்தின் சிறப்பு " இக்கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசுகிறது. இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது.
மொட்டைக் கோபுரம்தொகு
கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீ வாய்க்கப்பட்டு மொட்டையாய், இருகூறாய் பொலிவிழந்து நின்றது.
1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1963-ல் இராஜகோபுரத்திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு
1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது.[5]
சிற்றாறு எனும் ஆற்றங் கரையில் ஆலயம் உள்ளது. ரதிதேவி, மன்மதன், தமிழணங்கு சிலைகள் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டுள்ளன. நவாப் ஆட்சிக் காலத்தில், அரசாங்க ஆவணங்கள் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தன. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோயிலில் அமைந்துள்ளன.
இதையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ மனத்துக்கினியான் (சூன் 15, 2012). "மன நிம்மதி தரும் சந்நிதி!". சூன் 15, 2012. http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF!&artid=612973&SectionID=147&MainSectionID=147&SectionName=Vellimani&SEO=. பார்த்த நாள்: சூலை 30, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தென்காசி தல புராணம்
- ↑ http://temple.dinamalar.com/en/new_en.php?id=826
- ↑ ஆதாரம்: தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயில் வரலாறு கோயில் வெளியீடு-1964
- ↑ "மாலைமலர் செய்தி". மே 14, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 01, 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி); Check date values in:|accessdate=
(உதவி)