இராயகிரி
இராயகிரி (ஆங்கிலம்:Rayagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.
இராயகிரி பேரூராட்சி | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தென்காசி | ||||||
வட்டம் | சிவகிரி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
11,223 (2011[update]) • 1,320/km2 (3,419/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/rayagiri |
இராயகிரி பேரூராட்சி மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.மேற்படி மலையிலிருந்து தோன்றும் ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம் மற்றும் மேலக்கரிசல்குளம் போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது
அமைவிடம்
தொகுஇந்த ஊரின் வடக்கே சிவகிரி எனும் ஊரும், தெற்கே வாசுதேவநல்லூர் எனும் ஊரும், கிழக்கே கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன.
திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும், சங்கரன்கோவிலிருந்து 24 கிமீ தொலைவிலும், சிவகிரியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும், இராயகிரி பேரூராட்சி அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு8.5ச.கிமீ பரப்பும்,15வார்டுகளும், 61தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3270 வீடுகளும், 11223 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
கல்வி நிறுவனங்கள்
தொகுதொடக்கப் பள்ளிகள்
தொகு1இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு வெ.ராமசாமி நாடார் ஆரம்பப்பள்ளி. 2இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி.பா.ஆதித்தனார் ஆரம்பப்பள்ளி. 3டி.டி.டி.ஏ. துவக்கப்பள்ளி. 4அருணாச்சலா துவக்கப்பள்ளி. 5எஸ்.ஆர்.ஆர் துவக்கப்பள்ளி. 6எம்.எஸ்.பி. துவக்கப்பள்ளி.
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
தொகு1.இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. ஆதித்தனார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி. 2.இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி(தமிழ் மற்றும் ஆங்கில வழி)
ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள்
தொகு- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு கு காமராஜர் ஆங்கிலப்பள்ளி
- குமுதா நர்சரி மற்றும் ஆங்கிலப்பள்ளி
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ இராயகிரி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Rayagiri Population Census 2011
- ↑ Rayagiri Town Panchayat