சூரிய வம்சம்

சூரிய வம்சம் 1983-ஆம் ஆண்டில் மைசூரில் அமைந்துள்ள ’தொன்யாலோகா’ எனும் இலக்கிய அமைப்பிலிருந்து எழுத்தாளர் சா. கந்தசாமியால் எழுதப்பட்டத் தமிழ்ப் புதினம்[1]. சி. டி. ஐ. நரசிம்மையா என்ற ஆங்கிலப் பேராசிரியர் ’தொன்யாலோகா’வை மைசூரில் இருபது ஏக்கரில் நிறுவி நடத்தி வந்தார். சூரிய வம்சம் நாவல் ஒரே மாதத்தில் மைசூரில் எழுதி முடிக்கப்பட்டாலும். முதற்பதிப்பு டிசம்பர் 2007 ஆம் ஆண்டில்தான் கவிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூல் க. நா. சுப்பிரமணியத்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது[2].

நல்லூரில்-திருக்கண்ணுடையார் கோயிலுக்குச் செல்லும் சாலையில் இருந்து ஆரம்பித்து இந்நூல் வளர்கிறது. கதையின் நாயகன் செல்லையாவின் பள்ளிப்பருவம் துவங்கி, பள்ளியை விட்ட பின்னருமான அவனது படிப்படியான வளர்ச்சியை 47 அத்தியாயங்களில் நூலாசிரியர் படைத்துள்ளார்.

கருவி நூல்

தொகு

சூரிய வம்சம் நாவல் : கவிதா வெளியீடு , முதற் பதிப்பு : டிசம்பர் 2007

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-05-23.
  2. http://www.worldcat.org/title/sons-of-the-sun-surya-vamsam/oclc/229343132
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_வம்சம்&oldid=3732118" இலிருந்து மீள்விக்கப்பட்டது