மகாபோதிவம்ச நூலின்படி, தன நந்தன் (சமசுகிருதம்: धनानन्द) (ஆட்சிக் காலம்: கிமு 329 – 321) நந்த வம்சத்தின் இறுதிப் பேரரசர் ஆவார். தன நந்தன் எட்டாண்டுகள் நந்தப் பேரரசை ஆண்டார்.

தன நந்தன்
பேரரசர்
தன நந்தன்
தன நந்தனின் பேரரசின் வரைபடம்
நந்த வம்சத்தின் இறுதிப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 329 – 321
முன்னையவர்மகாபத்ம நந்தன்
பின்னையவர்சந்திரகுப்த மௌரியர், (நிறுவனர், மௌரியப் பேரரசு)
அரசமரபுநந்த வம்சம்
தந்தைமகாபத்ம நந்தன்

கிரேக்க வரலாற்று ஆய்வாளார் புளூட்டாக்கின் கூற்றின்படி, மகாபத்ம நந்தனின் ஒன்பது மகன்களில் தன நந்தனும் ஒருவர் ஆவார். தன நந்தன் மற்றவர்களை இழிவுபடுத்தும் தீய குணங்களால் பொதுமக்கள் கடும் வெறுப்பு கொண்டிருந்தனர் என சந்திர குப்த மௌரியர் கூறுகிறார்.[1][2][3]

ஆட்சிப் பரப்புகள்

தொகு

தன நந்தனின் ஆட்சி பரப்பு, பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில் வரலாற்று கால வங்காளம் [4][5], முதல் மேற்கில் மத்திய இந்தியா வரையும், வடக்கில் நேபாளம் முதல் தெற்கில் விந்திய மலைத்தொடர் வரை பரவியிருந்தது.[6]

தன நந்தனின் அமைச்சரவை

தொகு

இவரது அமைச்சரவையில் பாண்டு, சுபாண்டு, குபேரன் மற்றும் சகதலா எனும் நான்கு அமைச்சர்கள் இருந்தனர்.[7] இவ்வமைச்சர்களில் சகதலா என்பவர், தன நந்தனின் கருவூலத்தை சூறையாடிதற்காக கடும் தண்டனை வழங்கினார். இதனால் கோபமுற்ற அமைச்சர் சகதலா, தன நந்தனை வீழ்த்த சாணக்கியரின் உதவியை நாடினார். [8]

கலிங்கத்துடன் உறவுகள்

தொகு

தனநந்தனின் மகனும், இளவரசருமான சௌரிய நந்தனுக்கு கலிங்க நாட்டின் இளவரசி தமயந்தியை மணமுடித்தனர்.[9]

இராணுவம்

தொகு

தன நந்தனின் போர்ப்படையில் 2,00,000 தரைப்படையினரும், 20,000 குதிரைப்படை வீரர்களும், 2,000 தேர்ப்படைகளும், 3,000 யானைப்படைகளும் இருந்ததாக கிரேக்க வரலாற்று ஆசிரியர் டையடோரஸ்[10] குறிப்பிடுகிறர். [4][11] கிரேக்க வரலாற்று ஆசிரியர் புளூட்டாக்கின் கூற்றுப்படி, தனநந்தனின் பெரிய போர்ப்படையில் இரண்டு இலட்சம் தரைப்படையினரும், 80,000 குதிரைப்படையினரும், 8,000 தேர்ப்படையும், 6,000 யானைப்படைகளும் இருந்தன.[12]

தனநந்தனின் வீழ்ச்சியும், இறப்பும்

தொகு

தன நந்தனின் இறப்பிற்கான சூழ்நிலை அறுதியிட்டு கூற இயலவில்லை. மௌரியப் பேரரசின் நிறுவனரான சந்திரகுப்த மௌரியர் சாணக்கியரின் துணையுடன் தன நந்தனை கொன்று, நந்தப் பேரரசின் தலைநகரம் பாடலிபுத்திரத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Mahajan, V.D. (2010), "Chapter XVIII : The Rise of Magadha Section (h) The Nandas", Ancient India, S.Chand, pp. 251–253, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8121908876
  2. Bongard-Levin, G. (1979), A History of India, Moscow: Progress Publishers, p. 264
  3. http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?doc=Perseus%3Atext%3A1999.01.0243&layout=&loc=62.1
  4. 4.0 4.1 Upinder Singh 2016, ப. 273.
  5. Sastri 1988, ப. 16.
  6. Radha Kumud Mookerji, Chandragupta Maurya and His Times, 4th ed. (Delhi: Motilal Banarsidass, 1988 [1966]), 31, 28–33.
  7. Rice 1889, ப. 8.
  8. Rice 1889, ப. 9.
  9. Pillai, Rajat (2011). Chandragupta: Path Of A Fallen Demi-God. Cedar Books. p. 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122312756.
  10. Diodorus
  11. Mookerji 1988, ப. 34.
  12. Bongard-Levin, G. (1979). A History of India. Moscow: Progress Publishers. p. 264.

மேற்கோள்கள்

தொகு
தன நந்தன்
முன்னர் நந்தப் பேரரசர்
329–321
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன_நந்தன்&oldid=4059592" இலிருந்து மீள்விக்கப்பட்டது