நந்தன் என்னும் நந்தர் குடி அரசன் ஒருவன் தன்னிடமிருந்த பெருஞ்செல்வத்தைத் தன் தலைநகர் பாடலிபுரத்தில் கங்கையாற்றில் மறைத்து வைத்திருந்தான். இந்திய வரலாற்றில் இவன் தனநந்தன் எனக் குறிப்பிடப்படுகிறான்.

அந்தச் செல்வத்தையே பெற்றாலும் அதனை வைத்துக்கொண்டு தலைவன் தலைவியை மறந்து அங்கேயே தங்கமாட்டான் என்று தோழி தலைவியிடம் சொல்லித் தலைவன் பிரிவால் வருந்தும் தோழியைத் தேற்றுகிறாள்.[1]

அடிக்குறிப்பு தொகு

  1. நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
    நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்
    தங்கலர் வாழி, தோழி! (மாமூலனார் பாடல் - அகநானூறு 251)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தன்&oldid=2715719" இருந்து மீள்விக்கப்பட்டது