மகாபாரதக் கதையில் அம்பாலிகா காசி மன்னனின் மகளும் அஸ்தினாபுரத்து மன்னன் விசித்திரவீரியனின் மனைவியும் ஆவார்.

அம்பாலிகா மற்றும் இவரின் சகோதரிகளான அம்பா, அம்பிகா ஆகியோர் தங்களுடைய சுயம்வரத்தின்போது பீஷ்மரால் வலுக்கட்டாயமாக அஸ்தினாபுரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களை சத்யவதியிடம் விசித்திரவீரியனின் திருமணத்திற்காக ஒப்படைத்தார்.

சில ஆண்டுகளில் விசித்திரவீரியன் இறந்து விட்டதால், அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனக்கும்-பாராசரர் முனிவருக்கும் பிறந்த முதல் மகனான வியாசரிடம் அம்பலிகாவை அனுப்பி வைத்தார். ஏற்கனவே அம்பாலிகாவின் மகன் குருடனாகப் பிறந்துவிட்டதால் சத்யவதி அம்பிகாவிடம் கண்களைத் திறந்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். எனினும் அம்பிகா பயத்தினால் உடல் வெளிறிவிட்டார். எனவே இவர்களுக்குப் பிறந்த பாண்டு மிகவும் வெளிறிய நிறத்தில் பிறந்தார். பாண்டுவின் புதல்வர்களே பாண்டவர் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாலிகா&oldid=3801673" இலிருந்து மீள்விக்கப்பட்டது