குருச்சேத்திரம்

குருச்சேத்திரம் ஒலிப்பு (இந்தி: कुरुक्षेत्र) இந்துக்களின் இதிகாசத்திலும், வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது இந்தியாவில், அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகரிலிருந்து 80 கிமீ தொலைவிலும், தில்லியிலிருந்து 100 கிமீ தொலைவிலும் உள்ளது.

குருச்சேத்திரம்
कुरुक्षेत्र
ਕੁਰੂਕਸ਼ੇਤਰ
தர்மச்சேத்திரம்
நகராட்சி
கிருட்டிணன், அருச்சுனன் அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்
கிருட்டிணன், அருச்சுனன் அமர்ந்திருக்கும் வெண்கல ரதம்
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்குருச்சேத்திரம்
பரப்பளவு
 • மொத்தம்1,530 km2 (590 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்9,64,655
 • அடர்த்தி630/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மற்றும் பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சலக சுட்டு எண்
136118
தொலைபேசி குறியீட்டு எண்91-1744
வாகனப் பதிவுHR 07X XXXX
இணையதளம்kurukshetra.nic.in
[1]

பாண்டவர்கௌரவர் படைகளுக்கு இடையே நடந்த குருச்சேத்திரப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் பகவத் கீதை பிறந்தது.

பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.

குருச்சேத்திரத்தில் அமைந்த தொன்மை வாய்ந்த புனித பிரம்ம சரோவர் குளம் அமைந்துள்ளது.

குருசேத்திரத்தின் வரலாறு

தொகு

வாமண புராணம் பரத குல அரசன், குரு என்பவன், சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் பொ.ஊ.மு. 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது.[1] யக்ஞம், தானம், தவம், வாய்மை, தியாகம், மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, மற்றும் பிரம்மச்சர்யம் போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”குரு”வின் மேன்மையை பாராட்டி, பகவான் விஷ்ணு அளித்த இரண்டு வரங்களின்படி, இவ்விடத்தில் இறப்பவர்கள் வீடுபேறு அடைவர். இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் 'குரு'வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்

தொகு

நிலவியல் அமைப்பு

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Lost River, by Michel Danino. Penguin India 2010
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-01. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-06-19.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-24. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kurukshetra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருச்சேத்திரம்&oldid=4136715" இலிருந்து மீள்விக்கப்பட்டது