அம்பிகா (மகாபாரதம்)

மகாபாரதக் கதையில் அம்பிகா(அம்பிகை) காசி மன்னனின் மகளும் அஸ்தினாபுரத்து மன்னன் விசித்திரவீரியனின் மனைவியும் ஆவார்.

இவரும் இவருடைய சகோதரிகளான அம்பா, அம்பாலிகா ஆகியோரும் தங்களுடைய சுயம்வரத்தின்போது பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களில் இருவரை விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைத்தார்.

விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது முதல் மகனான (கிருஷ்ண த்வைபாயனன்) வியாசரிடம் அம்பிகாவை அனுப்பி வைத்தார். அப்போது அச்சத்தினால் அம்பிகா தனது கண்களை மூடிக்கொண்டதால் அவர்களுக்கு பிறந்த திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தார். இவரின் புதல்வர்களே கௌரவர்கள் எனப்படுகின்றனர்.திருதராஷ்டிரன் குருடனாக பிறந்ததால் இரண்டாம்முறை செல்லுமாறு சத்தியவதி கேட்டுக்கொண்டாள்.

இரண்டாம் முறை அம்பிகா செல்லாமல் தனது பணிப்பெண்ணான பராஷ்ரமியை அனுப்பினாள். அவர்களுக்கு பிறந்தவரே விதுரன் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_(மகாபாரதம்)&oldid=3165242" இலிருந்து மீள்விக்கப்பட்டது