நந்தபிரயாகை
நந்தபிரயாகை (Nandaprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த சிற்றூர் மற்றும் பேரூராட்சியும் ஆகும். இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். நந்தபிரயாகையில் நந்தாகினி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளும் சங்கமம் ஆகுமிடமாக உள்ளது.[1]
நந்தபிரயாகை | |
---|---|
சிற்றூர் | |
நந்தபிரயாகையில் நந்தாகினி ஆறும் (முன்புறம்) அலக்நந்தா ஆறும் (பின்புறம்) சங்கமம் ஆகுமிடம | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 30°20′N 79°20′E / 30.33°N 79.33°E | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | சமோலி |
ஏற்றம் | 914 m (2,999 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,641 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 246449 |
நந்தபிரயாகை 30°20′N 79°20′E / 30.33°N 79.33°E பாகையில் அமைந்துள்ளது. இது இமயமலையில் 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. புதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் 538 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 58 நந்தபிரயாகை வழியாகச் செல்கிறது.
மக்கள் தொகை பரம்பல் தொகு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 401 வீடுகள் கொண்ட நந்தபிரயாகை பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,641 ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 228 ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 852 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.05% ஆகும். மக்கள் தொகையில் 92.14% இந்துக்கள் 92.14%, இசுலாமியர் 6.64% ஆகும். [2]
நீர் மின் நிலைத் திட்டம் தொகு
உத்தராகாண்ட் அரசின் மின்சார வாரியத்தினர் இந்நகரத்தில் பௌலா நந்தபிரயாகை நீர் மின் நிலையத் திட்டம் செயல்படுத்தி, 300 மெகா வாட் (4 x 75 MW) மின்சாரம் உற்பத்தி செய்கிறது. [3]
-
நந்தாகினி ஆறும், அலக்நந்தா ஆறும் கூடுமிடம், நந்தபிரயாகை
-
நநதபிரயாகை அருகே பங்காலி கிராமம்
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ Uttaranchal. Rupa & Co. 2006. ISBN 81-291-0861-5. Page 12
- ↑ Nandprayag Population Census 2011
- ↑ "Welcome to Uttarakhand Jalvidyut Nigam". http://www.uttarakhandjalvidyut.com/Bowala_Nanda.php?.
வெளி இணைப்புகள் தொகு
- Chamoli district, Official website பரணிடப்பட்டது 2011-07-30 at the வந்தவழி இயந்திரம்