நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்
நான்கு புனித தலங்கள் (Chota Char Dham) (தேவநாகரி: छोटा चार धाम) என்பது இந்தியாவின் இமயமலையில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்களைக் குறிப்பதாகும்.[1][2][3] ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இந்துக்கள் இந்நான்கு தலங்களுக்குக் பயணிப்பதை வடமொழியில் சார் தாம் யாத்திரை என்பர்.
நான்கு சிறு கோயில்கள் | |
---|---|
கேதாரிநாத் | பத்ரிநாத் |
கங்கோத்ரி | யமுனோத்திரி |
நான்கு புனித தலங்கள் | |
---|---|
பெயர் | |
பெயர்: | நான்கு சிறு தலங்கள் |
தேவநாகரி: | छोटा चार धाम |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரகண்ட் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவன் (கேதார்நாத்) விஷ்ணு (பத்ரிநாத்) கங்கா (கங்கோத்திரி) யமுனா (யமுனோத்திரி) |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | வட இந்தியக் கட்டிடக் கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | 4 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | அறியப்படவில்லை |
அமைத்தவர்: | பாண்டவர் |
யாத்திரை
தொகுஇந்நான்கு புனித தலங்களுக்கு செல்ல தில்லி, அரித்துவார் போன்ற நகரங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் உள்ளது.
- யமுனோத்திரி, யமுனை கோயில் அமைவிடம் மற்றும் யமுனை ஆற்றின் பிறப்பிடம்.
- கங்கோத்திரி, கங்கை ஆற்றின் பிறப்பிடம் மற்றும் கங்கோத்திரி கோயில் அமைவிடம்.
- கேதார்நாத், 12 சோதிலிங்க சிவத்தலங்களில் ஒன்றாகும்.
- பத்ரிநாத், பத்ரிநாராயணன் எனும் திருமால் கோயிலின் அமைவிடம்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Chard Dham Yatra பரணிடப்பட்டது 2009-05-12 at the வந்தவழி இயந்திரம் Govt. of Uttarakhand, Official website.
- ↑ "Char Dham yatra kicks off as portals open - Hindustan Times". Archived from the original on 2014-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-10-30.
- ↑ Destination Profiles of the Holy Char Dhams, Uttarakhand